வெளியானது ’சாஹூ`-வின் பர்ஸ்ட் லுக்!
பிரபாஸ்-ன் பிரந்தநாளையொட்டி இன்று ’சாஹூ' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!
தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என 3 மொழிகளிலும் ரூ. 150 கோடி செலவில் உருவாகி வரும் திரைப்படம் 'சாஹூ'. இயக்குனர் சுஜீத் இயக்கும் இப்படத்தினை வம்சி மற்றும் பிரமோத் ஆகியோர் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.
இந்தி நடிகர் நீல் நிதின் முகேஷ் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். ஜாக்கி ஷராப், சங்கி பாண்டே, வெண்ணிலா கிஷோர் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்நிலையில் இன்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரினை படக்குழு வெளியிட்டுள்ளது!