தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான தேர்தல் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்றது. இத்தேர்தலில் நடிகர் நாசர் தலைமையில் ‘பாண்டவர் அணி’ என்ற பெயரில் ஓர் அணி களமிறங்க, அதை எதிர்த்து ‘சுவாமி சங்கரதாஸ் அணி’ என்ற பெயரில் நடிகர் பாக்யராஜ் தலைமையிலான அணி போட்டியிட்டது. இத்தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், இந்தத் தேர்தலில் வாக்காளர் பட்டியல் சரியாக தயார் செய்யப்படவில்லை எனக் கூறி, தேர்தலை ரத்து செய்யவேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது தொடர்பான வழக்கின் விசாரணை முடிவில் நடந்து முடிந்த தேர்தலை ரத்து செய்து  உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டது. பின்னர் புதிய தேர்தல் நடத்தவும் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, தனி நீதிபதியின் இந்த உத்தரவை ரத்து செய்யவேண்டும் எனவும் வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரி நடிகர் விஷால் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். அதன் பின்னர், நடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் நடத்தப் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத்தடை விதிக்கப்பட்டது. இதனால் 2019ஆம் ஆண்டு நடந்து முடிந்த தேர்தலுக்கான முடிவுகளை அறிவிப்பதற்கு இருந்த தடை விலகியது. இதையடுத்து நடிகர் சங்கத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை எப்போது நடைபெறும் எனும் கேள்வி இருந்துவந்தது. இந்நிலையில், வரும் மார்ச் 20ஆம் தேதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில், நுங்கம்பாக்கம் Good Shepherd பள்ளியில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கவுள்ளது.


மேலும் படிக்க | ‘விஜய்-66’ வில்லன் இவரா!? இவரு லிஸ்ட்லயே இல்லையே!


தமிழகத்தில் சினிமாவையும் அரசியலையும் பிரிக்கவே முடியாது எனச் சொல்லப்படுவதுண்டு. அரசியல் கட்சிகளின் தேர்தல் முடிவுகளை அறிந்துகொள்வதைப் போலவே சினிமா தொடர்பான தேர்தல் முடிவுகளை அறிந்துகொள்ளவும் பொதுமக்கள் காட்டிவரும் ஆர்வமானது, மேற்கண்ட கூற்றுக்கு வலுசேர்ப்பதாக உள்ளது. நடிகர் சங்கத் தேர்தல் சினிமா வாட்டாரத்தைத் தாண்டி அரசியல் வட்டாரத்திலும் முக்கியத்துவம் பெறுவது வழக்கமான ஒன்றுதான் என்றாலும் அப்போக்கானது, சமீபகாலமாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில்தான் நடிகர் சங்கத் தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகவுள்ளன. இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு தற்போது முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளதால் எந்த அணி வெற்றிபெறப் போகிறது அதில் யாரெல்லாம் வெற்றிபெறப்போகிறார்கள் எனத் தெரிந்துகொள்ள மக்களும் ஆர்வமாக உள்ளனர்.


மேலும் படிக்க | சில படங்களைப் பார்க்கும்போது பொது நலவழக்கு போடும் எண்ணம் வருகிறது - பாக்யராஜ்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR