சென்னை: ஆரம்ப முதலே பல எதிர்ப்புகள் மற்றும் சிக்கல்களை சந்தித்து வந்த தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தேர்தல் இன்று நடைபெறுகிறது. வாக்கு பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து சங்கத்தின் புதிய தேர்தலை ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நடத்த முடிவு செய்யப்பட்டது.
ஆனால் சங்கத்தின் உறுப்பினராக இருந்த 61 பேர் எந்தவிதமான காரணங்களும் இல்லாமல் சங்கத்தின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி விட்டதாக கூறி சென்னை மாவட்ட சங்க பதிவாளரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சங்க பதிவாளர் தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதனையடுத்து சென்னை மாவட்ட பதிவாளரின் உத்தரவை எதிர்த்து நடிகர் சங்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் திட்டமிட்டப்படி தேர்தலை நடத்த அனுமதி அளித்தது. மேலும் வாக்குப்பதிவு நடைபெறும் இடத்துக்கு பாதுகாப்பு அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தநிலையில், இன்று ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் தலைமையில் செயிண்ட் எப்பாஸ் பள்ளியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
The announcement : tmrw 23rd Sunday #NadigarSangam election will be held in the St.EBBA girls higher sec school, Dr.Radhakrishnan road- same as where the voting took place last time too. Time 7am to 5pm. #siaa #siaaelection2019 pic.twitter.com/frP6LiJr5q
— NadigarSangam PrNews (@NadigarsangamP) June 22, 2019