பிரேமம் படத்தில் நடித்ததற்குப் பிறகு நிவின் பாலிக்கு தமிழ், மலையாளம் என அதிக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கெளதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் நிவின் பாலியின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ரிச்சி'. இப்படத்தில், நிவின் பாலி, நட்டி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், லட்சுமி ப்ரியா என பலர் நடித்து உள்ளனர். 


கன்னடத்தில் வெற்றி பெற்ற ‘உலிடவரு கண்டந்தி’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகி இருக்கும் இந்த படத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் வசிக்கும் ஒரு ரவுடி கதாபாத்திரத்தில் நிவின் பாலி நடித்திருக்கிறார். 


அஜனீஷ் லோக்நாத் இசையமைத்தள்ள இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், படம் வருகிற 8-ம் ரிலீசாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


இப்படத்தின் டிரைலர் இப்போது வெளியாகியுள்ளது.