இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்க நடிகர் சமுத்திரக்கனி கமிட் ஆகியுள்ளார். இதன் மூலம் தெலுங்கில் சமுத்திரக்கனி நடிக்கும் முதல் படமாகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாகுபலி படத்தை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமௌலி அடுத்ததாக இயக்கவிருக்கும் ஆக்‌ஷன் திரில்லர் படம் ஆர்ஆர்ஆர். இந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் தேஜா ஆகிய இருவரும் நாயகர்களாக நடிக்க, இப்படத்தை, டி.வி.வி.தனய்யா தயாரிக்கிறார். 


ரூ.300 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்திற்கு ராஜமெளலி, ராமா ராவ், ராம் சரண் என மூவரின் பெயருமே ‘ஆர்’ என்ற எழுத்தில் தொடங்குவதால், 'ஆர்ஆர்ஆர்' எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் நடந்து வருகிறது.


இந்நிலையில் ஆர்ஆர்ஆர் படத்தில் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது தான் அவர் நடிக்கும் முதல் தெலுங்கு படம் என்பது குறிப்பிடத்தக்கது.