தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் தனி இடத்தை பிடித்த நடிகைகளுள் ஒருவர் சாய் பல்லவி. இவருக்கு, குறிப்பாக தமிழ் நாட்டில் பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர். இவர் நீலகிரி மாவட்டத்தில் பிறந்து கோயம்புத்தூரில் வளர்ந்தவர், ஜார்ஜியாவில் மருத்துவம் படித்து பட்டம் பெற்றவர். ஆனால் மருத்துவராகப் பதிவு செய்துகொள்ளாமல் தன் தாய்வழியாக நடனம் மீது ஏற்பட்ட ஆர்வத்தால் தொலைக்காட்சி நடனப் போட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

‘கஸ்தூரிமான்’, ‘தாம்தூம்’ திரைப்படங்களில் பெயரிடப்படாத வேடங்களில் நடித்து வந்த சாய் பல்லவி கடந்த 2015 ஆம் ஆண்டு ஆண்டில் வெளிவந்து மாபெரும் வெற்றிப் படமாக ஓடிய மலையாளத் திரைப்படமான பிரேமம் திரைப்படத்தில் மலர் என்ற கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமானார். தமிழகத்தில் அந்தப் படம் 200 நாட்களுக்கு மேல் ஓடி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அவரின் கதாபாத்திரமான மலர் டீச்சர் என பலரும் சாய் பல்லவியை அழைக்க அரம்பித்தனர். இளைஞர்களின் கனவு கன்னியாக மாறினார். 


மேலும் படிக்க | Manobala: “பாட்டு பாடனுமா..மறந்து போச்சே?” மனோபாலாவின் கடைசி தருணத்தில் எடுக்கப்பட்ட வீடியோ!


பின்னர் இதைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டில் வெளியான கலி என்ற திரைப்படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்தார். வருண் தேச்சுடன் இணைந்து பானுமதி என்ற கதாபாத்திரத்தில் காதல் படமான பிடாவில் நடித்ததன் மூலம் 2017 இல் தெலுங்கு திரைப்பட உலகில் அறிமுகமானார். தொலைக்காட்சியில் பிடா திரைப்படம் ஒளிபரப்பப்பட்டபோது தொலைக் காட்சிகளுக்கான தரவரிசையில் ஐந்தாவது முறையாக அதிகபட்ச இலக்கு அளவீட்டுப் புள்ளியை எட்ட இப்படம் காரணமாக இருந்தது. இதுவரை 15 படங்களில் நடித்துள்ள சாய் பல்லவி, குறுகிய காலத்தில் நிறைய பெயரை சம்பாதித்துள்ளார், இது ஒரு நடிகரின் வாழ்க்கையில் ஒரு பெரிய சாதனையாகும். மிடில் கிளாஸ் அப்பாயி, மாரி 2, அதிரன், பாவ கதைகள், லவ் ஸ்டோரி, ஷியாம் சிங்க ராய் மற்றும் கார்கி ஆகியவை குறிப்பிடத்தக்க சில படங்கள். திரையுலகில் தனது பணியின் மூலம் மட்டுமே அவர் தன்னை மக்களுக்குத் தெரியப்படுத்துகிறார். 


இந்த நிலையில் தனது தெலுங்கு படமான விரத பர்வம் படத்தின் ப்ரமோஷன் வெளியீட்டில் அளித்த பேட்டியில், சாய் பல்லவி தனது படங்களில் ஏன் குட்டையான ஆடைகளை அணியவில்லை என்பதற்கான காரணத்தை வெளியிட்டு இருந்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது.


“நான் ஜார்ஜியாவில் படிக்கும் போது, டேங்கோ கற்றுக்கொண்டேன். ஒரு பெர்ஃபார்மன்ஸூக்காக, நான் ஸ்லிட் டிரஸ் அணிய வேண்டியிருந்தது, இதற்காக என் பெற்றோரிடம் அனுமதியும் வாங்கினேன். அவர்களும் சரிதான் சொன்னார்கள். பின்னர், எனது முதல் படமான பிரேமம் வெளியாகி, எனது நடிப்பிற்காக நான் பாராட்டப்பட்டபோது, எனது டேங்கோ நடன வீடியோ வைரலானது. அந்த வீடியோவை பார்த்த மக்கள் வீடியோவை நிறுத்தி வைத்து எனது ஸ்லிட் டிரஸ் குறித்து கருத்து தெரிவிக்க தொடங்கினர். என் மனதில் நான் புறக்கணிக்கப்படுவது போல் உணர்ந்தேன், மேலும் மிகவும் சங்கடத்திற்கு உள்ளானேன்”, என்று அவர் கூறினார்.


“அந்த சம்பவத்திற்கு பிறகு நான் இந்த முடிவை தேர்ந்தெடுத்தேன். ஒருவரின் உடையை வைத்து அவரின் குணத்தை நாம் மதிப்பிட முடியாது. நீங்கள் சென்று என் பெற்றோரிடம் கேட்டால், அவர்கள் நான் சில சமயங்களில் கூச்சலிடுவேன், என் மனநிலையை இழக்கிறேன் என்று சொல்வார்கள். நான் அணிவது எனது ஆளுமையை பிரதிபலிக்க வேண்டிய அவசியமில்லை,” என்று அவர் மேலும் கூறினார்” என்று அவர் மேலும் கூறினார்.


நடிகை சாய் பல்லவி தற்போது உலக நாயகன் கமல் ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்.கே. 21 படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். அதனால் அவரின் கதாபாத்திரம் நிச்சயம் வெயிட்டானதாக இருக்கும் என நம்பப்படுகிறது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் SK 21 படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | மதிய வேளையில் மாஸ் காட்ட வந்த சீரியல், ஆரம்பமே களைகட்டிய சண்டக்கோழி - முதல் எபிசோடில் நடந்தது என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ