மதிய வேளையில் மாஸ் காட்ட வந்த சீரியல், ஆரம்பமே களைகட்டிய சண்டக்கோழி - முதல் எபிசோடில் நடந்தது என்ன?

Zee Tamil TV Serial Sandakozhi: நண்பகல் 2 மணிக்கு ஒளிபரப்பாகும் சண்டக்கோழி சீரியல் குறித்த விமர்சனம். மதிய வேளையில் ஒரு கலகலப்பான சீரியலாக இந்த சண்டக்கோழி இருக்கும் என உறுதியாக நம்பலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Shiva Murugesan | Last Updated : May 9, 2023, 12:04 PM IST
  • ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகும் சண்டக்கோழி சீரியல்.
  • எதிர் வீட்டு பெண்ணுடன் போனில் ரொமான்ஸா பேசும் விஜய். அங்கு வரும் விக்ரம்.
  • இந்த பிச்சைக்கார குடும்பத்தை யார் இங்க கூப்பிட்டது என கோபம் கொள்ளும் வில்லி அபிநயா.
மதிய வேளையில் மாஸ் காட்ட வந்த சீரியல், ஆரம்பமே களைகட்டிய சண்டக்கோழி - முதல் எபிசோடில் நடந்தது என்ன? title=

Sandakozhi Episode: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இன்று முதல் திங்கள் டு சனி வரை தினமும் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள புத்தம் புதிய சீரியல் சண்டக்கோழி. 

இந்த சீரியலின் முதல் நாள் எபிசோட் ஒளிபரப்பான நிலையில் சண்டக்கோழி தமிழ் சீரியல் எப்படி இருக்கு என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

ஆரம்பமே சீரியல் நாயகி மகா ( ரியா விஸ்வநாதன் ) சீமந்தத்துக்கு ஸ்வீட் டெலிவரி செய்ய போக அப்போது அவரது அம்மா போன் செய்ய மகா கொஞ்ச நேரத்தில் டெலிவெரி பண்ணிடுவேன் என வேக வேகமாக வண்டியில் கிளம்ப எதிரே வரும் விக்ரம் ( நியாஸ் ) காரின் மீது மோதி கீழே விழ பலகாரம் மொத்தமும் கொட்டி சிதறுகிறது. 

விக்ரம் காரில் இருந்து கீழே இறங்கி வர மகா எழுந்து கொள்ள உதவி கேட்டு கை நீட்டுகிறாள். ஆனால் விக்ரமோ காருக்கு என்ன ஆச்சு என பார்க்க மகா கோபப்பட்டு முடிஞ்சா என் மேல ஏத்து பார்க்கலாம் என வழியில் குறுக்கே நிற்க விக்ரம் வேகமாக காரை எடுத்து வர மகா ஏத்திவிடுவான் போல என பதறி அடித்து ஓடி கீழே விழுகிறாள். 

மேலும் படிக்க: வில்லிகளின் சதியால் உயிரிழக்கும் பொம்மி.. எதிர்பாராத திருப்பங்களுடன் நினைத்தாலே இனிக்கும் சீரியல்

அதன் பிறகு விக்ரம் வீட்டுக்கு வர அவனது தங்கை நலங்கு பங்க்ஷனுக்கு எதுக்கு லேட் என கேட்டு சண்டை போடுகிறாள். பிறகு விக்ரமின் தம்பி விஜய் காட்டபடுகிறார். அவன் எதிர் வீட்டு பெண்ணுடன் போனில் ரொமான்ஸா பேசி கொண்டிருக்க அங்கு விக்ரம் வந்து விடுகிறான். 

விக்ரமை பார்த்த எதிர் வீட்டு பெண் அவனிடம் பேச ஆசைப்பட விஜய் போனை கொடுக்க விக்ரம் அவளை கொன்னுடுவேன் என மிரட்ட அந்த பெண் பயந்து ஓடுகிறாள். பிறகு வாழ்க்கையில் ஜெயிக்கணும்னா கல்யாணமே பண்ண கூடாது என பாடம் எடுக்கிறான் விக்ரம். பதிலுக்கு விஜய் உன் உடம்புல காதல் ப்ளட்டை கொஞ்சம் ஏத்து அண்ணா என சொல்கிறான். 

அடுத்து கோவிலில் மகாவின் அக்கா ஐஸ்வர்யா தனது தங்கைகளுக்காக வேண்டிக்கொண்டு மகாவுக்கு போன் செய்ய அவள் பலகாரம் கீழே கொட்டிய விசயத்தை சொல்கிறாள். வீட்டில் மகாவின் அம்மா ஜோதி சீமந்த வீட்டார் பலகாரம் இன்னும் டெலிவெரி செய்யவில்லை என போன் போட்டு கோபப்பட அவர் துடைப்ப கட்டையுடன் மகாவுக்காக காத்து கொண்டிருக்கிறாள். 

மேலும் படிக்க: சீதா ராமன்: மதுமிதா கொடுத்த அதிர்ச்சி.. சீதாவுக்காக சண்டை போட்ட ராம்

மகாவும் ஐஸ்வர்யாவும் வண்டியை மீன்பாடி வண்டியில் தூக்கி போட்டு எடுத்து வர ஜோதி மகாவை அடிக்க பாய்கிறாள். குடும்பத்தினர் சமாதானம் செய்ய அதன் பிறகு ஒரு கல்யாணத்துக்கு போக வேண்டும் என்பதால் பக்கத்துக்கு வீட்டில் பணத்தை கடனாக கேட்க போக அந்த பெண் பணம் இல்லை என பொய் சொல்ல பிறகு அந்த பெண்ணின் கணவர் வர அவர் பிசினஸ் இப்போ நல்லா போயிடு இருக்கு என உண்மையை உளற ஜோதி கொடுக்க விருப்பம் இல்லனா அதை நேரடியாவே சொல்லி இருக்கலாம், எதுக்கு பொய் சொல்லணும் என பேசி விட்டு அங்கிருந்து கிளம்புகிறாள். 

அதனை தொடர்ந்து மகா குடும்பம் கல்யாண மண்டபத்தில் வந்து இறங்க ஆட்டோ டிரைவர் 20 ருபாய் அதிகம் கேட்க ஜோதி அதெல்லாம் தர முடியாது என வாக்குவாதம் செய்ய இதை மேலே இருந்து பார்க்கும் வில்லி அபிநயா இந்த பிச்சைக்கார குடும்பத்தை யார் இங்க கூப்பிட்டது என கோபம் அடைகிறாள். 

இப்படியாக இன்றைய எபிசோட் மோதல், விறுவிறுப்பு பரபரப்பு, காமெடி கலாட்டா என அனைத்தும் சேர்ந்த ஒன்றாக இருந்துள்ளது. இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

எனவே மதிய வேளையில் ஒரு கலகலப்பான சீரியலாக இந்த சண்டக்கோழி இருக்கும் என உறுதியாக நம்பலாம்.

மேலும் படிக்க: கார்த்தியை சந்தித்த ஜானகி.. அபிராமிக்கு காத்திருந்த அதிர்ச்சி: கார்த்திகை தீபம் அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News