ராமாயண கதையில் சீதையாக சாய் பல்லவி-ராமனாக ரன்பீர் கபூர்..அப்போ ராவணன் யாருப்பா?
Sai Pallavi in Ramayana Movie: புதிதாக உருவாக உள்ள ராமாயண கதையில் சீதை கதாப்பாத்திரத்தில் சாய் பல்லவி நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.
தென்னிந்திய திரையுலகின் பிரபலமான நடிகைகளுள் ஒருவர், சாய் பல்லவி. இவர் இந்தியில் தயாராகும் இராமாயண கதை ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ராமாயண கதை:
இந்திய திரையுலகை பொறுத்தவரை புராண கதைகளை எத்தனை முறை எடுத்தாலும் அதை பலமுறை பார்ப்பதற்கு ரசிகர்கள் விரும்புவர். அப்படி தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் ராமாயண கதை உருவானது. சினிமாவின் வளர்ச்சிக்கு ஏற்றார் போல பிளாக் அண்ட் வைட், கலர் படம் என பல வகைகளில் ராமாயண கதை படங்களாக வெளிவந்துள்ளன. சமீபத்தில் வெளியான “ஆதிபுருஷ்” திரைப்படம் அதற்கு ஒரு சான்று.
பாலிவுட்டின் மிகப்பெரிய இயக்குநர்களுள் ஒருவர், நித்தேஷ் திவாரி. இவர், ராமாயண கதை ஒன்றை இயக்க உள்ளதாக சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்திருந்தார். இதில் ராமர் கதாப்பாத்திரத்தில் பிரபல இந்தி நடிகர் ரன்பீர் கபூர் ராமர் கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இதற்காக அவர் தனது உடலை மெருகேற்றி வருவதாக கூறப்படுகிறது.
சீதா கதாப்பாத்திரத்தில் சாய் பல்லவி..
தென்னிந்திய மொழி படங்களில் நடித்து தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகையாக விளங்குபவர் சாய் பல்லவி. இவரை நித்தேஷ் திவாரி இயக்க இருக்கும் ராமாயண கதையில் ஜானகி தேவி (சீதை) கதாப்பாத்திரத்தில் நடிக்க வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முன்னதாக, பாலிவுட் நடிகையும் ரன்பீர் கபூரின் மனைவியுமான ஆலியா பட்டை சீதை கதாப்பாத்திரத்தில் நடிக்க வைக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், இந்த திட்டத்தில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராவணனாக நடிப்பது யார்?
நித்தேஷ் திவாரி இயக்கும் இந்த ராமாயண கதையில் இராவணனாக நடிக்க வைக்க கே.ஜி.எஃப் புகழ் ‘ராக்கி பாய்’ யாஷ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு வெளியான தகவல்களின் படி, யாஷிடம் ஏற்கனவே இராவணன் கதாப்பாத்திரத்தில் நடிக்குமாறு கூறி அழைப்பு வந்ததாகவும் அதை யாஷ் மறுத்து விட்டதாகவும் கூறப்பட்டிருந்தது. ஆனால் தற்போதோ, அவர் ராமாயண கதையில் நடிக்க ஒப்பு கொண்டிருப்பதாகவும், இதற்காக அவர் 15 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல்கள் உண்மையானால், கே.ஜி.எஃப் படத்தை அடுத்து யாஷின் திரை வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையாக இந்த ராமாயண படம் அமையும் என ரசிகர்களிடம் இருந்து கருத்துகள் எழுந்துள்ளன.
இந்தியில் களமிறங்கும் சாய் பல்லவி..
மலையாளத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான ‘பிரேமம்’ திரைப்படத்தில் மலர் டீச்சர் கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபலமானவர், சாய் பல்லவி. மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து ஹிட் பட நாயகி என பெயரெடுத்தவர் இவர். இவர் இதுவரை மேற்குறிப்பிட்ட மும்மொழி திரைப்படங்களை தாண்டி வேறு எந்த மொழியிலும் நடித்ததில்லை. ராமாயண கதையில் இவர் சீதையாக நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தகவல் உறுதிப்படுத்த பட்டால் இது அவரது முதல் இந்தி படமாக இருக்கும்.
சாய் பல்லவி, தற்போது சிவகார்த்திகேயனின் 21ஆவது படத்தில் நாயகியாக நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் பூஜை விழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியானது. இதில் சாய் பல்லவி, படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி அருகில் மாலையுடன் நின்றிருந்தார். இதை பார்த்த நெட்டிசன்கள் சிலர், “சாய் பல்லவிக்கு திருமணம் ஆகி விட்டது” என்ற புரளியை கிளப்பி விட்டனர். பின்பு அதற்கு விளக்கம் கொடுத்த சாய் பல்லவி, ரசிகர்களின் இந்த செயல் தனக்கு வருத்தம் அளிப்பதாக தெரிவித்திருந்தார்.
மேலும் படிக்க | Sai Pallavi: “சாய்பல்லவி மீது எனக்கு க்ரஷ் உள்ளது..”உண்மையை உடைத்த பிரபல நடிகர்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ