ஒரே நாளில் 2 போட்டியில் விளையாடும் இந்திய அணி... நேரலையில் இலவசமாக பார்ப்பது எப்படி?

Indian Cricket Team: உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் நெதர்லாந்தை இந்திய சீனியர் ஆடவர் அணி நாளை (அக். 3) சந்திக்க உள்ள நிலையல், ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய இளம் அணி நாளை நேபாளம் உடன் மோதுகிறது.

Written by - Sudharsan G | Last Updated : Oct 2, 2023, 04:29 PM IST
  • உலகக் கோப்பை பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
  • உலகக் கோப்பை லீக் சுற்று அக். 5ஆம் தேதி தொடங்குகிறது.
  • ஆசிய விளையாட்டு தொடரின் கிரிக்கெட் போட்டியில் இந்தியா பங்கேற்றது.
ஒரே நாளில் 2 போட்டியில் விளையாடும் இந்திய அணி... நேரலையில் இலவசமாக பார்ப்பது எப்படி? title=

Indian Cricket Team: உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடக்க உள்ள நிலையில், கிரிக்கெட் சீசன் தற்போது தொடங்கி உள்ளது. வரும் அக். 5ஆம் தேதி தொடங்கி, நவ. 19ஆம் தேதி வரை இந்த தொடர் நடைபெற உள்ளது. இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து என 10 அணிகள் விளையாட உள்ளன. 

உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம்

இந்த தொடருக்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டிருந்தது. ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட அணி கடந்த செப்டம்பர் மாத தொடக்கத்திலேயே அறிவிக்கப்பட்டது. அதில் விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, குல்தீப், பும்ரா, ஷமி என சீனியர் வீரர்களும், இஷான் கிஷன், கில், சூர்யகுமார், சிராஜ், ஷர்துல் தாக்கூர் என்ற ஜூனியர் வீரர்களும் இதில் விளையாட உள்ளனர். முதலில், அக்சர் படேல் அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். ஆசிய கோப்பையில் அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அஸ்வின் தற்போது அணியில் இணைந்துள்ளார்.

IND vs NED: நேரலையை இலவசமாக பார்ப்பது எப்படி?

வரும் அக். 8ஆம் தேதி இந்தியா தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது. அதற்கு முன் பயிற்சி ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை இந்தியா நாளை (அக். 3) சந்திக்க இருக்கிறது. கடந்த செப். 30ஆம் தேதி கௌகாத்தியில் திட்டமிடப்பட்டிருந்த இங்கிலாந்து அணியுடனான பயிற்சி ஆட்டம் முழுமையாக ரத்தானது. எனவே, நாளைய போட்டியை காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த பயிற்சி ஆட்டம் மதியம் 2 மணிக்கு தொடங்கும் நிலையில், தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரலையாக போட்டியை காணலாம். ஹாட்ஸ்டார் செயலியில் நீங்கள் இலவசமாகவும் காணலாம். 

மேலும் படிக்க | 1983, 2011 உலகக் கோப்பை இரண்டும் இல்லை... இதுதான் இந்தியாவுக்கு ரொம்ப ஸ்பெஷல் - முழு விவரம்

ஆசிய விளையாட்டு போட்டி 

இது ஒருபுறம் இருக்க, சீனாவின் ஹாங்சோ நகரில் ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. அதில் 2014ஆம் ஆண்டுக்கு பின் கிரிக்கெட் விளையாட்டு (டி20 வடிவத்தில்) போட்டி சேர்க்கப்பட்டுள்ளது, குறிப்பாக இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணிகளும் அதில் பங்கேற்றுள்ளன. மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணி, இலங்கையை வீழ்த்தி தங்கம் வென்றிருந்தது. இந்திய ஆடவர் அணி நாளைதான் தனது முதல் போட்டியை விளையாட உள்ளது. முதல் போட்டியை பலமாக காணப்படும் நேபாள அணியை இந்தியா சந்திக்க உள்ளது. 

பலம் வாய்ந்த நேபாளம் 

நடப்பு ஆசிய விளையாட்டு தொடரில் மங்கோலிய அணிக்கு எதிரான போட்டியில் நேபாளம் பல புதிய சாதனைகளை படைத்திருந்தது. டி20களில் ஒரு இன்னிங்ஸில் எடுக்கப்பட்ட அதிக ஸ்கோர், அதிவேக அரைசதம், அதிவேக சதம் என அதுவரை இருந்த பல சாதனைகளை நேபாளம் அன்று முறியடித்து ஒரே நாளில் அத்தனை சாதனை பட்டியலிலும் முதல் இடத்தை பிடித்ததது எனலாம்.  

இந்தியா - நேபாளம் போட்டியை இலவசமாக பார்ப்பது எப்படி?

அந்த வகையில், நாளை இந்தியா - நேபாளம் அணிகளுக்கு இடையிலான போட்டியையும் ரசிகர்கள் அதிக எதிர்பார்க்கின்றனர். இந்த போட்டியை சோனி லிவ் ஓடிடியிலும், சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வோர்க் சேனலின் மூலம் தொலைக்காட்சியிலும் காணலாம், அதுவும் இரண்டிலும் இலவசமாக என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த போட்டி இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு தொடங்கும். 

Asian Games 2023: இந்திய அணி

ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), முகேஷ் குமார், சிவம் மாவி, சிவம் துபே, பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ராகுல் திரிபாதி, திலக் வர்மா, ரின்கு சிங், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங்.

மேலும் படிக்க | 'இந்தியா என்றால் பாகிஸ்தான் வீரர்கள் பயப்படுகிறார்கள்' - ஒரே போடாக போட்ட பாக். மூத்த வீரர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News