மீனாட்சி பொண்ணுங்க: குடிபோதையில் மயங்கிய வெற்றி.. ஷக்திக்கு ஷாக் கொடுத்த ரங்கநாயகி..!
மீனாட்சி பொண்ணுங்க சீரியலின் இன்றைய எபிசோடில் வெற்றி குடிபோதையில் திருமணத்தில் நடனமாடி மயங்க, திருமண மண்டபத்தில் திடீரென சக்தி என்ட்ரி கொடுப்பதால் பரபரப்பாகிறது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சக்தி போட்டு இருந்த மோதிரத்தை கழற்றி வெற்றி பூஜாவின் கையில் போட்டுவிட, சக்தி அழுது கொண்டு மண்டபத்தை விட்டு வெளியேறி ஒரு இடத்தில் வந்து நிற்கிறாள்.
அடுத்து வெற்றி சக்திக்கு மோதிரம் போட்ட பழைய காட்சியை நினைத்துப் பார்த்து அழுகிறாள். பின் சக்தி தன் வீட்டுக்கு செல்கிறாள். அங்கு துர்கா மற்றும் யமுனா சக்தியின் நிலைமையை பார்த்து, இப்பவாவது வெற்றியிடம் உண்மையை சொல்லிவிடு, வெற்றி பூஜாவை கல்யாணம் செய்து விட்டால் நீ என்ன செய்வாய் என்று கேட்க, சத்தி யோசித்தவாறு இருக்கிறாள்.
மகளின் நிலைமையை பார்த்து என்ன செய்வது என்று தெரியாமல் நீதிமணி மனம் வருத்தம் அடைகிறான். கல்யாண வீட்டில் வெற்றி பார்ட்டி கொண்டாடுகிறான். அங்கே குடித்துவிட்டு நடனம் ஆடுகிறான். இதைப் பார்த்து சரண்யா வருத்தம் அடைகிறாள். ஆனால் பூஜாவோ சந்தோஷப்படுகிறாள். மேலும், பூஜாவும் வெற்றியுடன் சேர்ந்து நடனம் ஆடுகிறாள். ஒரு கட்டத்தில் வெற்றி போதையில் தள்ளாடி விழ, இதை பார்த்த திடியன் சக்திக்கு போன் செய்கிறான். உடனே சக்தி வீட்டில் இருந்து கிளம்பி கல்யாண மண்டபத்திற்கு வருகிறாள்.
அங்கே ரங்கநாயகி இங்கேயே இரவு தங்கிவிடு, வெற்றியை பார்த்துக் கொள் என்று கூறுகிறாள். போதையில் மயங்கி நிலையில் இருக்கும் வெற்றியை சக்தி கைதாங்களாக அழைத்துச் செல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
மேலும் படிக்க | நடிகை வனிதா விஜயகுமாரின் மூன்றாவது கணவர் பீட்டர் பால் இன்று உயிரிழந்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ