90ஸ் கிட்ஸ் பலராலும் மறக்கவே முடியாத ஒரு பெயர் சக்திமான். பிரபல மாயாஜால டிவி தொடரான சக்திமான், அந்தக் காலத்து சூப்பர் மேன் கதைகளின் உச்சம் என்றே சொல்லலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த அளவுக்கு அத்தொடர் பலரையும் கட்டிப்போட்டது. இதில் சக்திமானாக நடித்த முகேஷ் கன்னா அந்தத் தொடர் மூலமாக உலகளவில் பிரபலமானார். சக்திமான் தொடர் நிறுத்தப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில் மீண்டும் இத்தொடரைக் கொண்டுவர முயற்சிகள் நடந்துவருவதாகக் கூறப்படுகிறது. நடிகர் முகேஷ் கன்னாவைப் பொறுத்தவரை அவர் தெரிவிக்கும் கருத்துகள் சமீப காலமாக சர்ச்சையைச் சந்தித்து வருகின்றன. 


அந்த வகையில் தற்போது புதிய சர்ச்சை ஒன்றில் அவர் சிக்கியுள்ளார். முகேஷ் கன்னா யூடியூப் சானல் ஒன்றை நடத்திவருகிறார். அதில் வெளியான வீடியோ ஒன்றில் பெண்கள் பற்றிப் பேசிய ஒரு கருத்துதான் தற்போது சர்ச்சையாக வெடித்துள்ளது.


அதாவது, அந்த வீடியோவில் பெண்கள் பற்றி பேசிய முகேஷ் கன்னா, உடலுறவுக்கு ஆண்களை அழைக்கும் பெண்கள் பெண்களே அல்ல என தெரிவித்துள்ளார். அது மட்டுமில்லாமல் அவ்வாறு தனது ஆசையை ஆண்களிடம் தெரிவிக்கும் பெண்களை பாலியல் தொழிலாளிகளுடனும் அவர் ஒப்பிட்டுள்ளார்.


மேலும், டீசண்டான பெண்கள் இந்த மாதிரியெல்லாம் நடந்துகொள்ளமாட்டார்கள் எனும் தொனியிலும் அவர் பேசியுள்ளார்.


மேலும் படிக்க | மீண்டும் சர்ச்சைக்குரிய கதையில் கை வைத்த ‘ஜெய்பீம்’ இயக்குநர்!- எந்த வழக்கு தெரியுமா?


 


பெண்கள் குறித்த முகேஷ் கன்னாவின் இந்தக் கருத்துக்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புக் குரல் எழுந்துள்ளது. நாடறிந்த பிரபலமான முகேஷ் கன்னா போன்றவர்கள் பொதுவெளியில்  கருத்துக்களைத் தெரிவிக்கும் முன் சற்றே யோசித்துப் பார்க்கவேண்டும் எனவும் சிலர் விமர்சனம் செய்துள்ளனர்.


பெண்கள் பற்றி இழிவாகப் பேசிய முகேஷ் கன்னா தனது கருத்துக்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


மேலும் படிக்க | இந்த முறை 'தாதாசாகேப் பால்கே' விருது யாருக்கு? ஏன்? - கோலிவுட் லெஜெண்டுகள் பற்றிய ஓர் அலசல்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ