சலார் படத்தின் மூன்றாவது நாள் வசூல் நிலவரம்: இயக்குனர் பிரசாத் நீல் இயக்கத்தில், பிரபாஸ் மற்றும் பிரித்விராஜ் சுகுமாரன் நடிப்பில் அண்மையில் வெளியான 'சலார் பார்ட் 1' திரைப்படத்தின் மூன்றாவது நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சலார் பார்ட் 1-சீஸ் ஃபயர் திரைப்படம்:
‘பாகுபலி’ நாயகன் பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள படம், சலார். இந்த (Salaar Part 1: Ceasefire) படம் இரண்டு பாகமாக எடுக்கப்பட்டுள்ளது. இதன் முதல் பாகம் கடந்த 22 ஆம் தேதி வெளியானது. இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கியிருக்கிறார். இவர், ஏற்கனவே கே.ஜி.எஃப் என்ற படத்தை இயக்கி பான்-இந்திய அளவில் வெற்றி பெற்ற இயக்குநராக மாறினார். சலார் படத்தையும் கே.ஜி.எஃப் பாணியில் இயக்கியிருக்கிறார். அந்த படத்தில் வேலை பார்த்த அதே படக்குழுவினர்தான் சலார் படத்திலும் வேலை பார்த்துள்ளனர். பிரபாஸ் உடன் இணைந்து ஸ்ருதி ஹாசன், பிருத்விராஜ் சுகுமாரன், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


மேலும் படிக்க | DD3: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க இருந்த படத்தை இயக்கும் தனுஷ்!


இந்த படத்தை பெரிய அளவில் கேங்க்ஸ்டர் கதையாக எடுத்துள்ளனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தாலும் விமர்கர்கள் மத்தியில் நல்ல பாராட்டுகளை பெறவில்லை. 


சலார் Part 1 – Ceasefire படத்தின் முதல் இரண்டு நாள் வசூல்:
உலகளவில் ரூ. 165 முதல் ரூ. 175 கோடி வரை முதல் நாள் வசூல் செய்துள்ள சலார் திரைப்படம் தமிழகத்தில் முதல் நாள் ரூ. 5 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளது. தெலுங்கில் ரூ. 65 கோடியும் வெளிநாடுகளில் மொத்தமாக முதல் நாள் ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள சலார் தமிழ்நாட்டில் ரூ. 5 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளது. 


மறுபுறம் இரண்டாம் வசூல் நிலவரத்தை பற்றி பேசுகையில், உலக அளவில் படம் ரூ. 295.7 கோடி வசூலித்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. இதையடுத்து இரண்டு நாள்களிலேயே ரூ. 300 கோடி வரை வசூலித்திருக்கிறது. 



சலார் Part 1 – Ceasefire படத்தின் மூன்றாம் நாள் வசூல் நிலவரம்:
இந்நிலையில் தற்போது இந்த திரைப்படம் வெளிவந்து மூன்று நாட்கள் ஆகியுள்ள நிலையில் தற்போது ரூ. 370 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. மூன்றே நாட்களில் ரூ. 350 கோடி மயில்கல்லை கடந்துள்ள சலார் விரைவில் ரூ. 500 கோடி மயில்கல்லை கடந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


முன்னதாக, 2023 ஆண் ஆண்டில் வெளிவந்த பாக்ஸ் ஆபிஸில் வசூலை குவித்த படங்களான அனிமேல், ஜவான், பதான் ஆகிய படங்களின் முதல் நாள் வசூல் சாதனையை சலார் முறியடித்து, மேலும் பாகுபலி சீரிஸ் படங்களுக்கு பிறகு பிரபாஸ் நடித்த மூன்று படங்கள் ரசிகர்களின் வரவேற்பை பெறவில்லை. அதனால் சலார் படம் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில், விமர்சனங்களுக்கு மத்தியிலும் வசூலில் பட்டைய கிளப்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | அப்படியே அசினை உரித்து வைத்திருக்கும் அவரது மகள்! போட்டோவை பார்த்துள்ளீர்களா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ