Salaar Box Office: சலார் படத்தின் முதல்நாள் வசூல் விவரம்! தமிழ்நாட்டில் இவ்வளவுதான் கலக்ஷனா..?
Salaar Movie Collection: பிரபாஸ் நடிப்பில் வெளியாகியுள்ள சலார் திரைப்படம் முதல் நாளில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?
பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள சலார் திரைப்படம் நேற்று வெளியானது.
கே.ஜி.எஃப் படத்தை இயக்கி பான்-இந்தியா அளவில் பெரிய இயக்குநராக மாறிய பிரசாந்த் நீல் எடுத்துள்ள அடுத்த படம், சலார் பார்ட் 1-சீஸ் ஃபயர். இந்த படத்தில் பிரபாஸ் உடன் பிருத்விராஜ் சுகுமாரன், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சலார் பார்ட்-1: சீஸ் ஃபயர்:
தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நேற்று (22 டிசம்பர்) வெளியான படம், சலார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகத்திற்கு சலார் பார்ட் 1 சீஸ் ஃபயர் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்க, ஸ்ருதி ஹாசன், ஈஸ்வரி ராவ், பாபி சிம்ஹா, ஸ்ரியா ரெட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படத்தில் பலரும் எதிர்பார்க்காத அளவிற்கான கிராஃபிக்ஸ் காட்சிகளும், சண்டை காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இந்த படம் தெலுங்கு மற்றும் கன்னட ரசிகர்களை கவர்ந்திருந்தாலும், தமிழ் ரசிகர்களை பெரிதும் ஈர்க்கவில்லை.
முதல் நாள் வசூல்..
சலார் படம், உலகளவில் ரூ.165 கோடி வரை வசூல் பெற்றுள்ளது. தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ.5 கோடி வரை முதல் நாளில் வசூல் செய்துள்ளது. தெலுங்கில் இப்படம், ரூ.65 கோடியும், பிற நாடுகளில் ரூ.50 கோடிகளையும் வசூல் செய்துள்ளது. பிற இடங்களுடன் ஒப்பிட்டு பார்க்கையில், தமிழகத்தில் மட்டும்தான் இப்படம் குறைவான வசூலை பெற்றிருக்கிறது.
சலார் படம் எப்படி?
நடிகர் பிரபாஸ், பாகுபலி படத்தில் இருந்து பெரிய பட்ஜெட் படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்துக்கொண்டிருக்கிறார். ஆனால் அந்த படங்களை அனைத்துமே தோல்வியை தழுவி வருகின்றன. குறிப்பாக, அவர் சமீபத்தில் நடித்து ஹிட் அடிக்கும் என்று நினைத்த படம் ஆதிபுருஷ். ஆனால் இந்த படம் பெரும் தோல்வியை தழுவியது.
இதையடுத்து இவர் நடித்திருக்கும் சலார் படமும் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதில் பிரபாஸிற்கு பில்ட்-அப்பிற்கு மேல் பில்ட்-அப் கொடுக்கப்பட்டுள்ளது. படத்தில் சண்டை காட்சிகளும் ரத்தம் தெறிக்கும் காட்சிகளும் அதிகமாக இருப்பதால் கதை பெரிதாக அடிவாங்கியுள்ளது.
மேலும் படிக்க | சலார் படத்தில் பிரபாஸ் வாங்கிய சம்பளம் மட்டும் இவ்வளவா..!
பிரபாஸின் சம்பளம்..
தென்னிந்தியாவில் அதிக அளவில் சம்பளம் வாங்கும் நாயகர்களுள் ஒருவர், பிரபாஸ். முன்னர் சில லட்சங்களில் சம்பளம் வாங்கி கொண்டிருந்த இவர், தற்போது ட்ரிப்பில் டிஜிட் கோடிகளுக்கு தாவி விட்டார். இவர் நடிக்கும் படங்களில் எல்லாம் இவருக்கு பெரிய அளவில் பில்ட்-அப் கொடுக்கப்பட்டு, சண்டை காட்சிகள் மிகைப்படுத்தி காண்பிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், சலார் படத்திலும் அதே கதையாகத்தான் உள்ளது. ஆனால் திரைக்கதையுடன் அதற்கான காட்சிகள் ஒன்றிவிடுவதால் அது அவ்வளவு பெரிய குறையாக தெரியவில்லை.
சலார் படம் கிட்டத்தட்ட 400 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் கால் பங்கு பட்ஜெட், பிரபாஸின் சம்பளத்திற்கே ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, பிரபாஸிற்கு மட்டும் ரூ.100 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாம். இவர் அடுத்ததாக, கல்கி-2898 ஏடி எனும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படமும் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ