ஒரே பாடலில் ஓஹோன்னு வாழ்க்கை கிடைக்கும் என்றால், இப்போதைக்கு அந்த வாழ்க்கை சமந்தாவுக்கு தான் கிடைத்திருக்கிறது. புஷ்பா படத்தில் இடம்பெற்ற ‘ஊ சொல்றியா மாமா’ பாடலுக்கு ஆடிய பையர் டான்ஸ், பாலிவுட்டையும் கலங்கடித்து வருகிறது. அந்த ஒரே ஒரு பாடல் தான், இந்தியா முழுவதும் பட்டிதொட்டியெல்லாம் ஒரே மாதிரியான நெருப்பை பற்றவைத்துள்ளது. பாடல் ஒருபுறம் கிறுகிறுக்க வைக்கிறது என்றால், மறுபுறம் சமந்தாவின் கவர்ச்சி நடனம் மதிமயங்க வைக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | சர்ச்சையில் சிக்கிய திருச்சிற்றம்பலம்- ‘தாய்க் கிழவி’ பாடலுக்குத் தடை?


படம் வெளியானது முதல் இப்போது வரை அந்தப் பாடல் இன்னும் லைம் லைட்டிலேயே இருந்து கொண்டு இருக்கிறது. தெலுங்கில் ‘ஊ அண்டாவா’ பாடல், தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியிலும் றெக்கை கட்டி பறந்து கொண்டிருக்கிறது. அண்மையில் நடைபெற்ற IIFA விருது விழாவில் கலந்து கொண்ட சல்மான்கானிடம், அண்மையில் நீங்கள் வெகுவாக ரசித்த பாடல் எது? என்று கேட்கப்பட்டது. அதற்கு நொடிப் பொழுதில் பதிலளிக்கும் அவர், "ஓ அன்டாவா" என பாடிக் கொண்டே செல்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 



சல்மான்கானின் பதிலைப் பார்த்து மகிழ்ச்சியில் பூரித்த நடிகை சமந்தா, ஹார்ட் எமோஜிக்களை பதிலாக அள்ளிக் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து சமந்தா மற்றும் சல்மான்கான் ரசிகர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து நடிக்க வேண்டும் என டிவிட்டரில் கோரிக்கை வைக்கத் தொடங்கினர். சல்மான்கான் ரசிகர் ஒருவர்,  “சமந்தா, எங்கள் மெகாஸ்டார் சல்மான் கானுடன் உங்களைப் பார்க்க விரும்புகிறேன். நீங்கள் இருவரும் திரையில் ஹாட்டாகவும், அழகாகவும் இருப்பீர்கள்" எனத் தெரிவித்துள்ளார். 



தெலுங்கில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தனர். பாக்ஸ் ஆஃபீஸில் வசூலைக் குவித்த இந்தப் படத்தில், ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் சமந்தா நடனமாடியிருந்தார். முதலில் இந்தப் பாடலுக்கு நடனமாட வேண்டும் என அல்லு அர்ஜூன் கூறியபோது தயங்கிய சமந்தா, நீண்ட யோசனைக்குப் பிறகே ஒப்புக் கொண்டுள்ளார். தற்போது ’யசோதா’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் சமந்தா, பாலிவுட்டிலும் கால்பதிக்க உள்ளார். சல்மான் கானுடன் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 


மேலும் படிக்க  | ஒய் ஜி மகேந்திராவின் 'சாருகேசி' நாடக குழுவிற்கு இன்ப அதிர்ச்சி அளித்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR