இதனால் பாலிவுட் திரையுலகம் ஏறகுறைய 500 கோடி இழப்பினை சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாலிவுட் பிரபலம் சல்மான் கான் மானை வேட்டையாடியதாக தொடுக்கப்பட்ட வழக்கு 20 ஆண்டுகளாக இழுத்தடிக்கப் பட்டு வந்த நிலையில் இன்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த தீர்ப்பில், நடிகர் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறைவாசமும், ரூ 10 ஆயிரம் அபராதமும் விதித்து ராஜஸ்தான் ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கில் சிக்கிய நடிகைகள் சோனாலி பிந்த்ரே, தபு, நீலம் மற்றும் நடிகர் சயீப் அலி கான் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர். 


இதனையடுத்து, சிறைச்சாலை சென்ற சல்மான்கானுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பின் அவரை தற்போது சிறை வார்டு 2-ல் அடைக்கப்பட்டு உள்ளார். பின்னர் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள சிறை எண் 106-ல் மாற்றப்படுவார். நாளை அவருக்கு கைதிக்கான சீருடை வழங்கப்படும். அவர் அடைக்கபட்டுள்ள சிறை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. 


இன்று சல்மான் கான் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். அதன் மீதான விசாரணை நாளை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.