நடிகை சமந்தா நடித்துள்ள ஓ பேபி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


கே.வி. நந்தினி இயக்கத்தில், சமந்தா 70 வயது கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ஓ பேபி. கடந்த 2014 ஆண்டு கொரியன் மொழியில் வெளியான மிஸ் கிராணி படத்தின் தெலுங்கு ரீமேக்காக இப்படம் உருவாகியுள்ளது.


இந்த படத்தில் இளமையான தோற்றத்தில் சமந்தாவும், வயதான தோற்றத்தில் லட்சுமி நடித்திருக்கிறார்கள். மேலும் ஊர்வசி, ராவ் ரமேஷ், நாக சவுரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷான் பணிகளில், படக்குழுவினர் கவனம் செலுத்தி வந்தனர். இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.