தெலுங்கு திரையுலகின் புகழ்பெற்ற திரைப்பட நட்சத்திரங்களும் பவர் ஜோடியுமான சமந்தா அக்கினேனி மற்றும் நாக சைதன்யாவின் உறவு குறித்த ஊகங்கள் சில நாட்களாக தலைப்புச் செய்திகளில் இடம் பெற்று வருகின்றன. அவர்கள் பிரிந்து விட்டதாகவும் விரைவில் விவாகரத்து செய்யப் போகிறார்கள் என்றும் பெரிதும் பேசப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வதந்திகளைப் பற்றி இருவரிடமும் பல முறை கேட்கப்பட்டது. ஆனால் அவர்கள் இருவரும் கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்கவில்லை.


சமீபத்தில் வெளிவந்து வெற்றி நடைபோட்ட வெப் சீரிஸ் ‘ஃபாமிலி மான்-2’-வில் (Family Man 2) சமந்தா சில போல்ட் காட்சிகளில் நடித்திருந்தார். இந்த காட்சிகளில் நடிக்க சமந்தா ஒப்புக்கொண்டதுதான் இவர்களுக்குள் உருவான கருத்து வேறுபாட்டிற்கு காரணமாக அமைந்தது என்றும் பலர் கூறி வருகின்றனர். 


தற்போது, ​​சைதன்யா சாய் பல்லவியுடன் லவ் ஸ்டோரி படத்தில் நடித்து வருகிறார். பாலிவுட் நடிகரும், நாக சைதன்யாவின் லால் சிங் சத்தாவில் அவருடன் நடிக்கும் நடிகருமான அமீர்கான் சமீபத்தில் படத்தின் விளம்பர பணிகளுக்காக ஐதராபாத் சென்றார்.


ALSO READ: வாழ்த்திய மருமகள், கண்டுகொள்ளாத மாமனார்! விவாகரத்து உண்மையா? 


நாக சைதன்யாவும் அவரது தந்தை நாகார்ஜுனாவும், அமீர் கானுக்கு இரவு விருந்து அளித்தனர். இந்த இரவு உணவு விருந்தின் பல படங்கள் ஆன்லைனில் வெளிவந்தன. இருப்பினும், இந்த விருந்தில் சமந்தா (Samantha) இல்லாதது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.


சமந்தா, இந்த விருந்தில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. சமந்தாவும் நாக சைதன்யாவும் பிரிந்து விட்டார்கள் என்ற வதந்தியை இந்த விருந்து மேலும் பெரிதாக்கியுள்ளது.


இதற்கிடையில், அமீர்கானுடனான இரவு உணவின் போது நாகார்ஜுனா உணர்ச்சிவசப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. அவர்களின் உரையாடலின் போது படத்தில் சைதன்யாவின் கதாபாத்திரத்திற்கு பால ராஜு என்று பெயர் வைக்கப்பட்டிருப்பதை அவர்கள் உணர்ந்தனர். இதே பெயரில் நாகார்ஜுனாவும் ஒரு பிரபலமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால், அவர் உணர்ச்சிவசப்பட்டதாக கூறப்படுகின்றது.


இதற்கிடையில், ஒரு சமீபத்திய பேட்டியில், சமந்தாவை பிரிகிறாரா என சைதன்யாவிடம் (Naga Chaitanya) கேட்கப்பட்டது. அதற்கு அவர், “எனது தொழில் வாழ்க்கையின் ஆரம்ப காலத்திலிருந்தே, நான் எனது தனிப்பட்ட வாழ்க்கையை தனிப்பட்டதாகவும், தொழில் வாழ்க்கையை தொழில் ரீதியாகவும் வைத்திருக்கிறேன். நான் இரண்டையும் கலந்ததில்லை. நான் வளரும் போது என் பெற்றோரிடமிருந்து கற்றுக்கொண்டது இந்த பழக்கம். அவர்கள் வீட்டிற்கு வந்தவுடன் எப்போதும் வேலையைப் பற்றி பேசியது இல்லை. வேலைக்குச் சென்றபோது, ​​தங்களது தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் பேசியதில்லை. அவர்கள் பராமரித்த ஒரு மிகச்சிறந்த சமநிலை இது" என்று கூறினார்.


லால் சிங் சட்டா, 1994 ஆம் ஆண்டு வெளிவந்த ஃபாரஸ்ட் கம்ப் படத்தின் இந்தி ரீமேக் ஆகும். இதில் கரீனா கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


ALSO READ: டிஸ்பிளே பெயரை மாற்றிய சமந்தா; இதுதான் காரணமா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR