ஜவான் திரைப்படம்: ஜவான் திரைப்படம் வரும் 7ஆம் தேதி வெளியாக உள்ளது. இதில், ஷாருக்கான் ஹீரோவாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். நயன் கதாப்பாத்திரத்தில் இதற்கு முன்னர் நடிக்க இருந்தது இன்னொரு நடிகையாம். அவர் யார் தெரியுமா..? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமந்தா:


தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர், விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்துள்ள ‘குஷி’ திரைப்படம் நேற்று வெளியானது. சமந்தா, விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீ-மேக் மூலம் திரையுலகில் நுழைந்தார். மாஸ்கோவின் காவிரி, பாணா காத்தாடி போன்ற படங்கள் இவருக்கு நல்ல தொடக்கமாக அமைந்தன. தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழ் மொழி படங்களில் மாறி மாறி நடித்து வருகிறார். இவர், கடந்த ஆண்டு  விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ படத்தில் நயன்தாராவுடன் சேர்ந்து நடித்திருந்தார். 


மேலும் படிக்க | ஜெயிலர் மாஸ் வெற்றி-ரஜினிக்கு பிஎம்டபிள்யூ கார் பரிசு! இதன் விலை இத்தனை கோடியா..?


ஜவான் படத்தில் நடிக்க மறுப்பு..? 


சில படங்களையே இயக்கியிருந்தாலும், ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த இயக்குநர்களின் பட்டியிலில் இடம் பிடித்திருப்பவர் அட்லி. இவர் விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் என மூன்று படங்களை இயக்கி விட்டார். இதில் சமந்தா 2 படங்களில் நடித்துள்ளார். ‘ஜவான்’ படத்தில் நடிக்க சமந்தாவிடம் 2019ஆம் ஆண்டு பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாம். அப்போது அவர் நடிகர் நாக சைதன்யவுடன் திருமண உறவில் இருந்தார். அதனால் தன் குடும்பத்தில் கவனம் செலுத்துவதற்காக இவர் ஜவான் படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. 



இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. சினிமா வட்டாரங்களில் உள்ள சிலர், இத்தகவலை வெளியிட்டுள்ளனர். 


ஜவான் படம் மீது அதீத எதிர்பார்ப்பு..


‘பாலிவுட் பாட்ஷா’ என்று அழைக்கப்படும் ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கியுள்ள ஜவான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பயங்கர எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், தீபிகா படுகோன் கேமியோ கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். பிரியாமணி, சான்யா மல்ஹோத்ரா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இதில் முக்கிய கதாப்பாத்திரங்களாக வருகின்றனர்.


ஜவான் படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. படத்தின் எடிட்டிங் மற்றும் கிராஃபிக்ஸ் காட்சிகள் தரமாக இருப்பதாக ட்ரைலருக்கு பலர் விமர்சனம் கொடுத்துள்ளனர். சில நாட்களுக்கு முன்னர் இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த படத்தை பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள் படம் தரமாக வந்திருப்பதாக தெரிவித்ததாக சினிமா வட்டாரங்களில் இருப்போர் தகவல்களை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 


குஷி படத்திற்கு வரவேற்பு:


சமந்தா நடிப்பில் வெளியாகியுள்ள குஷி படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு அளித்துள்ளனர். இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தாவின் கெமிஸ்ட்ரி மிகவும் நன்றாக இருப்பதாகவும் படம் பார்த்த ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னர் வெளியான சமந்தாவின் சாகுந்தலம் திரைப்படம் பெரும் தோல்வியில் முடிந்தது. விஜய் தேவரகொண்டாவிற்கும் அவரது கடைசி படமான ‘லைகர்’ நெகடிவ் விமர்சனங்களால் அடி வாங்கி மன வேதனையை தந்தது. இருவருக்குமே தகுந்த கம்-பேக் தேவைப்பட்ட நிலையில் இவர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது குஷி படத்தின் ரிலீஸ். 


மேலும் படிக்க | பிரபல நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி காலமானார்! திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ