ஹைதராபாத்: நடிகை சமந்தா ருத் பிரபுவுக்கும் அவரது காதலரான அக்கினேனி நாக சைதன்யாவுக்கும் ஹைதராபாத்தில் திருமண நிச்சயதார்த்தம் நேற்று நடைபெற்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து வருகிறார். இந்நிலையில் அவர்களுக்கு ஹைதராபாத்தில் வைத்து நேற்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது. 



பிரமாண்டமாக நடந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் நாகர்ஜுனா மற்றும் சமந்தா குடும்பத்தார் அவர்களது நண்பர்கள் கலந்து கொண்டனர். 



இது குறித்து என் நாகர்ஜுனா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்தார்:-


 



 


சமந்தா மற்றும் நாக சைதன்யாவும் மோதிரம் மாற்றிக் கொண்டார்கள். மேலும் அவர்கள் இருவரும் இந்த ஆண்டே திருமணம் செய்து கொள்ளக்கூடும் என்று கூறப்பட்டது. 



அகில் நாகர்ஜுனா, நடிகை அமலா தம்பதியின் மகனும் நடிகருமான அகிலுக்கும் அவரது காதலிக்கும் நிச்சயதார்த்தம் ஏற்கனவே முடிந்துவிட்டது. அகிலின் திருமணம் வெளிநாட்டில் நடைபெற உள்ளது.