அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான ’புஷ்பா தி ரைஸ்’ திரைப்படம் பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷனில் தாறுமாறு ஹிட் அடித்தது. அல்லு அர்ஜூன், பகத்பாசில் ஆகியோர் பட முழுவதும் நடித்து பெயர் வாங்கியிருக்கிறார்கள் என்றால், அந்த புகழை ஒரே ஒரு பாடலில் அடித்து துவசம் செய்திருக்கிறார் சமந்தா. ‘ஊ சொல்றியா மாமா இல்ல உஊசொல்றியா’ என்ற ஐட்டம் சாங்கிற்கு அவர் அடிய பேயாட்டம், காட்டிய உச்சக்கட்ட கவர்ச்சியும் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | கோவா பீச்சில் உல்லாசம்; நீச்சல் உடையில் நடிகை சமந்தா


பாடல் வெளியானபோதே இந்தப் படத்தில் சமந்தாவின் ஆட்டத்தை பார்க்க காத்திருந்த ரசிகர்களுக்கு, திரையில் விருந்து படைத்திருந்தார் சமந்தா. இது குறித்து அவரே பேசும்போதுகூட, ’செக்ஸியாக நடிப்பது மிகவும் கடினம். உழைப்பு என வரும்போதெல்லாம், என்னுடைய முழு முயற்சியையும் கொடுப்பேன். அதைத்தான் புஷ்பா பாடத்தின் பாட்டுக்கும் கொடுத்தேன். உழைப்புக்கு கிடைத்த பாராட்டு தான் இது. நான் மிகவும் மகிழ்ச்சியாக, ரிலாக்ஷாக இருக்கிறேன்" என கூறியிருந்தார்.


 



இந்நிலையில், அந்தப் பாடலுக்கு அவர் ஒத்திகை செய்யும் வீடியோ நேற்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா வெளியிட்டார். படத்தில் தான் தாறுமாறு கவர்ச்சி என்றால், ஒத்திகையிலும் கூட தாராளம் காட்டியிருக்கிறார். அவரின் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், சமந்தாவா இது? எனும் அளவிற்கு கிறங்கிப்போய் உள்ளனர். அதில் இருந்து தெளிவதற்குள் அடுத்த பொறியாக  ‘ஊ சொல்றியா மாமா இல்ல உஊசொல்றியா’ பாடலின் தமிழ் வெர்சன் இப்போது யூ டியூப்பிலும் வெளியிடப்பட்டுள்ளது. இதைக் கேள்விப்பட்ட நெட்டிசன்கள், இன்ஸ்டாகிராமை விட்டுவிட்டு, யூ டியூப்பிற்கு தாவியுள்ளனர். 


ALSO READ | 'ஓ சொல்றியா' பாட்டு பாக்க ஆசையா? ரிலீஸ் தேதி அறிவிப்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR