ஹாலிவுட், AK61 - வினோதய சித்தம் அப்டேட்டுகளை கொடுத்த சமுத்திரக்கனி
ஏகே 61 திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ள சமுத்திரக்கனி, வினோதய சித்தம் படத்தின் தெலுங்கு ரீமேக்கை விரைவில் இயக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.
சமுத்திரக்கனி இப்போது தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் என பல மொழிகளிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். மகேஷ்பாபு மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்த சர்காரி வாரி பாட்டா படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டான்’ படத்திலும் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக நடித்திருக்கிறார். சிவகார்த்திகேயனுடன் 3வது படத்தில் இணைந்து நடித்திருக்கும் சமுத்திரக்கனியின் டான் படத்தின் கதாப்பாத்திரத்துக்கும் ரசிக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது.
மேலும் படிக்க | டான் ஹீரோவா? வில்லனா? திரைவிமர்சனம்!
இது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய சமுத்திரக்கனி, கிடைக்கும் நல்ல வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் நடித்துக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். அதற்கேற்ப நல்ல வாய்ப்புகள் அமைவதாக கூறிய சமுத்திரக்கனி, படத்தை இயக்கும் எண்ணமும் இருப்பதாக கூறியுள்ளார். ஜீ5 ஓடிடி தளத்தில் தமிழில் நேரடியாக வெளியான இப்படத்தை, தெலுங்கிலும் இயக்குகிறார் சமுத்திரக்கனி. அங்கு பவன் கல்யாண் ஹீரோவாக நடிக்கிறாராம். இதற்கான அனைத்து பணிகளும் நடைபெற்று வருவதாக தெரிவிதுள்ள சமுத்திரக்கனி, அடுத்த ஒரீரு மாதங்களில் சூட்டிங் தொடங்கிவிடும் எனக் கூறியுள்ளார்.
இதேபோல், ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் நடிகர் அஜித்குமாரின் ஏகே 61 படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறாராம் சமுத்திரக்கனி. இதனை அவரே கூறினார். மேலும், ஹாலிவுட்டில் படம் பண்ணுவது குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக புதிய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார் அவர். பான் இந்தியா படங்களை விட உலகப் படங்களை பண்ண வேண்டும் எனக் கூறியுள்ள அவர், எந்த மொழியில் நல்ல கன்டென்ட் படமாக இருந்தாலும் மக்கள் ரசிக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார். டான் படத்தில் நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்ட சமுத்திரக்கனி, " டான் மிகப்பெரிய வெற்றிப் படமாக இருக்கும். கல்லூரி, காதல், சோகம் என எல்லா உணர்வுகளும் இப்படத்தில் இருக்கிறது. நிச்சயம் வெற்றி பெற்றுவிடும்" எனத் தெரிவித்தார்.
மேலும் படிக்க | ‘ஃபையர்’ என நிரூபித்த அல்லு அர்ஜுன்- ‘புஷ்பா-2’வுக்கு இத்தனை கோடி சம்பளமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR