கதறி கதறி அழுத சஞ்சய் தத் - எதற்கு தெரியுமா?
சஞ்சய் தத் தனக்கு வந்த புற்றுநோய் குறித்தும் அதனை எதிர்கொண்ட விதம் குறித்தும் பேசியிருக்கிறார்.
பாலிவுட்டில் முன்னணி கதாநாயகர்களில் சஞ்சய் தத்தும் ஒருவர். இவருக்கென்று ரசிகர்கள் இருக்கின்றனர். சமீபத்தில் கேஜிஎஃப் 2வில் சஞ்சய் தத்தின் நடிப்புக்குஜ் பலர் பாராட்டு தெரிவித்தனர்.
இதற்கிடையே நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சஞ்சய் தத் சிகிச்சை எடுத்துவருகிறார். புற்றுநோய் வந்தது தொடர்பாக பேசியிருந்த சஞ்சய் தத், “கடவுள் கடினமான சோதனைகளை வலிமையானவர்களுக்கு கொடுப்பார் என பொதுவாக கூறுவதுபோல், எனக்கும் எனது குடும்பத்திற்கும் சில வாரங்கள் கடினமானதாக இருந்தது.
இன்று இந்த போரில் ஜெயித்து எனது குழந்தையுடைய பிறந்தநாளில் எனது உடல்நலத்தை அவர்களுக்கு சிறந்த பரிசாக கொடுத்துள்ளேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும் படிக்க | பீஸ்ட்டை தாழ்த்தி பேசுவது தவறு - ஆரி காட்டம்
இந்தச் சூழலில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “ஊரடங்கில் அது ஒரு சாதாரண நாளாக இருந்தது. நான் படிகளில் ஏறிக்கொண்டிருந்தபோது என்னால் மூச்சுவிட முடியவில்லை. அதன்பிறகு குளித்தேன், அப்போதும் மூச்சுவிட முடியவில்லை. என்ன நடக்கிறதென்று தெரியவில்லை.
எனது மருத்துவரை அழைத்தேன். எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது எனது நுரையீரலில் பாதிக்கும்மேல் நீர்கோர்த்திருந்தது தெரியவந்தது. நீரை வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. அது காசநோயாக இருக்கும் என அனைவரும் நினைத்தனர்; ஆனால் அது கேன்சர் என தெரியவந்தது.
அதை என்னிடம் சொல்வது என்பது அவர்களுக்கு கடினமாக இருந்தது. நான் யாருடைய முகத்தையாவது உடைத்துவிடுவேன் என்கிற பயம் அவர்களுக்கு. எனது சகோதரி என்னிடம் வந்து இதுபற்றி கூறினார். ஓகே. இப்போது என்ன?
மேலும் படிக்க | நாய்களை கண்டுகொள்ளாதீர்கள். அதுவே ஓடிவிடும் - கவிஞர் வைரமுத்து
என்னென்ன செய்யவேண்டும் என திட்டமிடுங்கள் என்று கூறினேன். ஆனால் எனது குழந்தைகள், மனைவி மற்றும் வாழ்க்கையை நினைத்து கிட்டத்தட்ட இரண்டு மூன்று மணிநேரம் கதறி அழுதேன்” என பேசியிருக்கிறார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR