இரும்புத்திரை, ஹீரோ உள்ளிட்ட படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில், கார்த்தி நடித்த ’சர்தார்’ திரைப்படம் தீபாவளி விருந்தாக வெளியானது. படம் வெளியான நாள் முதல் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்ற சர்தார், பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷனிலும் அசத்தியது. முதல் நாள் வசூல் சுமாராக இருந்தாலும், அடுத்தடுத்த நாள் வசூல் எகிறிக் கொண்டே சென்றது. குறிப்பாக, சர்தாருக்கு போட்டியாக களமிறங்கிய சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம், கடும் விமர்சனங்களை பெற்றது. இது பாக்ஸ் ஆஃபீஸிலும் எதிரொலித்தால் சர்தாருக்கு மவுசு கூடியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | பிக்பாஸ் வீட்டில் அத்துமீறி கையை வைத்த அஸீம்; தனலட்சுமியின் அதிர்ச்சி புகார்


வெள்ளிக்கிழமை -  6 கோடி ரூபாய் வசூலித்த சர்தார், சனிக்கிழமை -7 கோடி , ஞாயிறு -  8 கோடி, திங்கள் - 10.25 கோடி, செவ்வாய் -8.50 கோடி, புதன்கிழமை - 4.75 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் 55 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரம் இந்தப்படத்துடன் வெளியிடப்பட்ட  ‘பிரின்ஸ்’ திரைப்படம் தமிழகத்தில் வெறும் 22 கோடி மட்டுமே வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.



பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட பிரின்ஸ் திரைப்படம் நெகடிவ்வான விமர்சனங்களை பெற்றதும், நேர்த்தியான கதையை கொண்ட சர்தாருக்கு ஜாக்பாட் அடித்ததற்கு மற்றொரு காரணம். இதனால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். நடிகர் கார்த்தி ஏற்கனவே ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த நிலையில், தமிழ்நாட்டில் படத்தை வெளியிட்ட ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனர் உதயநிதி ஸ்டாலினையும் நேரில் சந்தித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.


மேலும் படிக்க | ஓவர் கவர்ச்சி... சட்டக் சிக்கலில் சிக்கியுள்ள பிக்பாஸ் புகழ் நடிகை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ