பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்றது சார்பட்டா பரம்பரை திரைப்படம்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆர்யாவின் (Arya) கடின உழைப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் திரையரங்கில் வெளியாகி இருக்கலாம் என்று ரசிகர்கள் மத்தியிலும் திரைத்துறையினர் மத்தியிலும் பேச்சுகள் எழுந்தன.   படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் இருந்தாலும் அவை அனைத்தும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்ததுள்ளன. 


ரங்கன், கபிலன் வாத்தியார், டான்சிங் ரோஸ், மாரியம்மா, கோனி , ராமன், துரைக்கண்ணு வாத்தியார், டாடி என்று முக்கிய கதாபாத்திரங்கள் அனைத்துமே நல்ல வரவேற்பை பெற்றது. சினிமா நட்சத்திரங்கள் தொடங்கி அரசியல்வாதிகள் வரை அனைவரும் இப்படத்தை பார்த்து பாராட்டி வந்தனர். சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் (Kamalhaasan) சார்பட்டா பட குழுவினரை நேரில் அழைத்து தனது வாழ்த்துக்களை கூறினார்.


ALSO READ: சார்பட்டா குழுவினரை சந்தித்து வாழ்த்திய கமல் - நன்றி கூறிய படத்தின் நாயகன் ஆர்யா



சார்பட்டா  (Sarpatta Parambarai) திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி தற்போது சமூக வலைதளங்களில் மீம் மெட்டீரியலாக மாறியுள்ளது. படத்தின் முக்கியமான ஒரு கட்டத்தில் ஆர்யா பசுபதியை சைக்கிளில் அமரவைத்து அழைத்துச் செல்லும்படியான காட்சியை ரசிகர்கள் பல்வேறு விதமாக மாற்றி மீம்களாக பதிவேற்றி வருகின்றனர். 


இருவரும் சைக்கிளில் செல்வதை கார், படகு, கம்பி மேல் போவது போன்று எடிட் செய்துள்ளனர்.  இந்த மீம்கள் அனைத்தும் தற்போது சமூக வலைதளங்களில் ஹிட்டடித்து வருகின்றன.



ALSO READ: சார்பட்டா பரம்பரை திரைப்படம்: இதுவரை சொல்லப்படாத கதை என நடிகர் சூர்யா பாராட்டு






 




உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR