ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்து வரும் படம் "சர்வம் தாளமயம்'". இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்திருக்கிறார். நெடுமுடி வேணு, வினீத், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த படம் 31-வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு நல்ல விமர்சனங்களைப் பெற்றது. மேலும் இந்த படத்தை தனக்கு நெருக்கமான திரைத்துறையில் இருக்கும் நண்பர்களுக்கும் திரையிட்டுக் காட்டி வருகிறார் ராஜீவ் மேனன். அப்படி பார்த்தவர்கள் "சர்வம் தாளமயம்" படத்தை பெரிதும் பாராட்டி வருகின்றனர். மேலும் இதை படத்துக்கு பல விருதுகள் காத்திருக்கிறது எனவும் கூறியுள்ளனர்.


ஏற்கனவே சர்வம் தாளமயம் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் இன்று "சர்வம் தாளமயம்" படத்தின் ட்ரைலரை வெளியிட்டது படக்குழு.