அரசியல் பயணத்தில் இருந்த கமல் ஹாசன் மீண்டும் நடிப்புக்கு திரும்பியிருக்கிறார். அதன்படி அவர் நடித்த விக்ரம் படம் மாபெரும் வசூலை குவித்தது உலக நாயகனை வசூல் கிங் என்று காட்டியது. விக்ரம் கொடுத்த உற்சாகத்தில் பாதியில் நின்றுபோன இந்தியன் 2 படத்தில் மீண்டும் கமிட்டானார். விக்ரம் படத்துக்கு முன்னதாகவே ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்து அதனைத் தொடர்ந்து நடந்த சில நிகழ்வுகள் என படத்தின் ஷூட்டிங் தடைப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தச் சூழலில் அவ்வப்போது இந்தியன் 2 குறித்த பேச்சுக்கள் எழுந்தன. ஒருவழியாக அனைத்து பஞ்சாயத்துகளும் முடிந்த சூழலில் நடிகர் விவேக்கும், நெடுமுடி வேணுவும் உயிரிழந்தனர். அதேசமயம் படப்பிடிப்பு தொடக்க பணிகளும் மும்முரமடைந்ததால் விவேக், நெடுமுடி வேணுவுக்கு பதிலாக யாரை நடிக்க வைப்பது என படக்குழு ஆலோசித்தது.


அதன் முடிவில் நெடுமுடி வேணு நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் சத்யராஜை நடிக்க வைக்க முடிவு செய்யப்பட்டதாம். இதுதொடர்பாக சத்யராஜிடம் பேச்சுவார்த்தை நடத்தி 15 நாள்கள் கால்ஷூட் கேட்டதாகவும், அப்போது அவர் ஒரு நாளுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வேண்டும் என கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனைக் கேட்டு ஷாக் ஆன தயாரிப்பு நிறுவனம் மீண்டும் ஒருமுறை சத்யராஜிடம் பேச திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. சத்யராஜ் ஏற்கனவே காக்கிச்சட்டை படத்திலும், சுஜாதா கதையில் வெளியான கமல் நடித்த விக்ரம் படத்திலும் வில்லனாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்க பொன்னியின் செல்வன் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த ரவிவர்மன் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். லைகா நிறுவன இந்தப் படத்தை தயாரிக்கிறது. உதயநிதியின் ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.


 



சில நாள்களுக்கு முன்பு தொடங்கிய படப்பிடிப்பில் கமல் ஹாசனும் கலந்துகொண்டார். படத்தின் ஷூட்டிங்கை விரைந்து முடிக்கவும் ஷங்கர் திட்டமிட்டிருக்கிறார்.


மேலும் படிக்க | 'அஜினோமோட்டோ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு: இணையத்தில் அதிரடி வரவேற்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ