Anna Today's Episode Update: தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘அண்ணா' சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அண்ணா : இன்றைய எபிசோட்


பிரபலமான ஜீ தமிழ்  தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஜோதிடரை ஷண்முகம் சந்தித்து பேசிய நிலையில் இன்று  நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.


அதாவது, ஷண்முகம் மார்க்கெட்டில் பாக்கியத்தை சந்தித்து விஷயத்தை சொல்ல முயற்சி செய்ய அவள் சனியன் தன்னுடன் இருப்பதால் அவனிடம் பணத்தை கொடுத்து ஒரு பொருளை மட்டும் வாங்கல, வாங்கிட்டு வா என்று அனுப்ப சனியனுக்கு இவர்கள் ஏதோ பேச போகிறார்கள் என்ற சந்தேகம் வருகிறது. 


இதனை தொடர்ந்து சனியன் ஜோதிடரை சந்தித்தேன், அவர் அம்மன் கோவமா இருக்கா அதனால் வேஷம் கட்டி ஆட சொல்றாரு, அப்பா ரத்னாவுக்கும் வெங்கடேஷுக்கும் காதும் காதும் வச்ச மாதிரி கல்யாணத்தை நடத்தி முடித்திடலாம்னு சொல்றாரு என்று சொல்ல அவளும் நல்ல விஷயம் தான், முதலில் ரத்னாவுக்கு கல்யாணத்தை முடித்திடலாம் என்று சொல்ல இதை சனியன் ஒட்டு கேட்டு விடுகிறான். 


இதனை அடுத்து சனியன் வீட்டிற்கு முத்துப்பாண்டி மற்றும் சௌந்தரபாண்டியிடம் விஷயத்தை சொல்ல சௌந்தரபாண்டி இதே திருவிழாவில் வச்சி நீ அந்த ரத்னா கழுத்தில் தாலியை கட்டிட்டு என்று சொல்ல முத்துபாண்டியும் அதற்கு தயாராகிறான். 


மறுபக்கம் வீட்டிற்கு வந்த ஷண்முகம் வேஷம் கட்டி ஆட போவதை சொல்ல அதை கேட்டு எல்லாரும் ஷாக் ஆகின்றனர். தங்கைகள் அண்ணனுக்காக நாமும் வேஷம் கட்டி ஆடலாம் என முடிவெடுக்கின்றனர். பிறகு என்ன வேஷம் போடணும்னு என ஷண்முகம் குறி கேட்க சிவன் வேஷம் போட சொல்லி உத்தரவு வருகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


அண்ணா: சீரியலை எங்கு பார்ப்பது?


அண்ணா சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 


மேலும் படிக்க | மீண்டும் திருமண வாழ்க்கையில் இணையும் ஐஸ்வர்யா-தனுஷ் ஜோடி..! உண்மை என்ன..?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ