இயக்குநர் ஆண்டனி சாமி இயக்கத்தில் வெளியாகவுள்ள சாயம் திரைப்படத்தின் இசை வெளியீடு மற்றும் ட்ரைலர் வெளியிட்டு நிகழ்ச்சி சென்னையில் உள்ள பிரசாத் லேப்பில் நடைபெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சாயம் படத்தில் கதாநாயகனாக "அபி சரவணன் நடித்துள்ளார். மற்றும் கதாநாயகியாக சைனி என்பவர் அறிமுகமாகிறார். இது தவிர படத்தில்  நடிகர் பொன்வண்ணன் , இளவரசு , மெட்டி ஒலி புகழ் போஸ் வெங்கட் போன்றோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு யுகபாரதி மற்றும் விவேகா பாடல்கள் எழுதியுள்ளனர்.


ALSO READ : அண்ணாத்த போஸ்டருக்கு ரத்த அபிஷேகம் சர்ச்சையில் ரஜினி ரசிகர்கள்: Viral Video


 படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த இயக்குநரும் நடிகர் விஜய்யினுடைய தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் கலந்து கொண்டு பேசும் போது :


படிக்கும் மாணவர்கள் மீது சாதி சாயம் பூசுவதால் அவன் வாழ்க்கையே எப்படி திசை மாறுகிறது என்பதை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகியுள்ளது. எனவும்


“மேலும் அவர் பேசுகையில் மாணவர்களிடம் சாதி சாயம் பூசக்கூடது. என்பதை வலியுறுத்தும் விதமாக இந்தப்படம் எடுக்கப்பட்டுள்ளது. சமூகத்திற்கு பயன்தரும் விதமான படங்களை எடுப்பவர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்.. ஜாதியை ஒழிப்பதற்கு நாம் நமது வாழ்க்கையில் நடைமுறையில்  என்ன செய்திருக்கிறோம்..? என் மகன் விஜய்யை பள்ளியில் சேர்க்கும்போது விண்ணப்பத்தில் சாதி , மதம் என்கிற இடத்தில் தமிழன் என்று குறிப்பிட்டேன்.. முதலில் ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். "


பள்ளியையே மூடும் அளவுக்கு போராட்டம் நடத்துவேன் என்று நான் கூறியதும், பின்னர் அமைதியாக அவர்கள் ஒப்புக் கொண்டுவிட்டனர். அப்போதிருந்து விஜய்யின் சான்றிதழில் சாதி என்கிற இடத்தில் தமிழன் என்றுதான் தொடர்ந்து வருகிறது.. சாதிக்கு நாம் தான் முக்கியத்துவம் கொடுக்கிறோம்.. நாம் நினைத்தால், இதுபோல பள்ளியில் சேர்க்கும்போதே சாதியை குறிப்பிடாமல் தவிர்த்தால் இன்னும் இருபது வருடங்களில் சாதி என்கிற ஒன்றே இல்லாமல் போய்விடும்.


எனவே யாராவது என் மகன் விஜய்யின் சாதி பெயர் கேட்டால் நான் போராட்டத்தில் இறங்குவேன்! என்று உணர்ச்சிவசத்துடன் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசினார் .


ALSO READ : Yogi babu: ஐன்ஸ்டீன் உயிரோடு இருந்திருந்தால் என்னை செருப்பால் அடித்திருப்பார்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR