Yogi babu: ஐன்ஸ்டீன் உயிரோடு இருந்திருந்தால் என்னை செருப்பால் அடித்திருப்பார்

”நான் ஐன்ஸ்டீனா நடிச்சத கூட ஏத்துக்குவாங்களாம். ஆனா நான் ஃபார்முலாவை தப்பா சொன்னா ஏத்துக்க மாட்டாங்களாம்” யோகி பாபு நையாண்டி...

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Sep 11, 2021, 03:45 PM IST
Yogi babu: ஐன்ஸ்டீன் உயிரோடு இருந்திருந்தால் என்னை செருப்பால் அடித்திருப்பார் title=

சென்னை: சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளியாகியிருக்கும் டிக்கிலோனா திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சயின்ஸ் ஃபிக்ஷன் காமெடி ஜோனரை மையப்படுத்திய இப்படத்தில் யோகிபாபு ஒரு விஞ்ஞானியாக நடித்திருக்கிறார். பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் பெயர் யோகிபாபு கதாபாத்திரத்திற்கு சூட்டப்பட்டிருந்தது.

நேற்று டிவிட்டர் ஸ்பேசசில் டிக்கிலோனா படக்குழுவினர் தங்களது வெற்றியை கொண்டாடிக் கொண்டிருந்தனர். அப்போது பேசிய யோகிபாபு, ”என்னைய போய் ஐன்ஸ்டீனா நடிக்க வெச்சிருக்காங்க. ஐன்ஸ்டீன் இப்போ உயிரோட இருந்திருந்தா என்னைய செருப்பாலயே அடிச்சிருப்பாரு” என்று காமெடியாக கூறினார். “அது மாதிரி எதுவும் நடக்குறதுக்கு முன்னாடி நானே அவரோட கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டிருப்பேன்” என்றும் யோகிபாபு பேசினார்.

அப்போது படக்குழுவினர் சயின்டிஸ்ட்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் முதல் படமாக டிக்கிலோனா இருக்கும் என யோகிபாபுவை கிண்டலடித்தனர். மேலும் பேசிய யோகிபாபு, “நான் ஏதோ ஃபார்முலாவை தப்பா சொல்லிட்டேன்னு எல்லாரும் பேசிக்குறாங்க. நான் ஐன்ஸ்டீனா நடிச்சத கூட ஏத்துக்குவாங்களாம். ஆனா நான் ஃபார்முலாவை தப்பா சொன்னா ஏத்துக்க மாட்டாங்களாம்” என்று கூறி கலகலவென சிரித்தார். ஸ்பேசசில் இணைந்திருந்த அனைவரும் சிரித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

“உண்மையில் அந்த ஃபார்முலா என்னுடைய கார் நம்பர்” என்று யோகிபாபு சொல்லி முடித்ததும் சிரிப்பலை எழுந்தது. எப்போதும் காமெடிய பேசக்கூடிய யோகிபாபு நேற்று டிவிட்டரில் இணைந்திருந்த சுமார் 1500 ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தார்.

Also Read | மாற்றுத்திறனாளிகளை கேலி செய்வது சமூக பண்பல்ல: சந்தானத்திற்கு கண்டனம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News