`வனமகன்` நாயகியின் கலக்கல் டான்ஸ் வீடியோ- பார்க்க!
வனமகன் திரைப்படத்தின் கதாநாயகி ஷாயிஷா பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடிய வீடியோ சமூக வலைதளத்தில் வைராலாகி உள்ளது.
நடிகர் ஜெயம் ரவி, புதுமுகம் ஷாயிஷா நடிப்பில் சமீபத்தில் உருவாகி உள்ள வனமகன் திரைப்படம் ரம்ஜான் பண்டிகை வெளியீடாக வருகிற 23-ம் தேதி வெளியாகிறது. இந்தப்படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார்.
வனமகன் படத்தின் கதாநாயகி ஷாயிஷா சைகல் ஆட்டம் போட்ட வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வளைந்து நெளிந்து ஆடும் அவரின் இந்த டான்ஸ் வீடியோ பலரின் வரவேற்பை பெற்றுள்ளது.