பிஎம் நரேந்திர மோடி திரைப்படத்திற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்த விவகாரத்தில் தலையிட முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி உள்ள பிஎம் நரேந்திர மோடி திரைப்படத்தை மக்களவை தேர்தல் முடியும் வரை வெளியிடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது.


இதுகுறித்து படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம், திரைப்படத்தை பார்த்த பிறகு தேர்தல் ஆணையம் இத்திரைப்படத்திற்கு தடை விதிப்பது குறித்து கூறலாம் என்று உத்தரவிட்டது. அதன் படி, தேர்தல் ஆணைய அதிகாரிகள் இத்திரைப்படத்தை பார்த்த பிறகு, படத்தை வெளியிடக்கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர்.


இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, திரைப்படத்திற்கு தேர்தல் ஆணையம் தடைவிதித்திருக்கும் முடிவில் தலையிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. எனவே தேர்தல் முடியும் வரை இத்திரைப்படத்தை வெளியிட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.