கடந்த ஆண்டு பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி பெரும் வரவரப்பினை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இதில், ஆரவ், ஓவியா, சினேகன், ஜூலி, காயத்திரி ஆகிய அனைவரும் ஒவ்வொரு விதத்தில் ரசிகர்களின் கவனத்தை பெற்றார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனையடுத்து, இந்நிகழ்ச்சியின் இரண்டாவாது சீசீசனையும் நடிகர் கமலஹாசன் அவர்களே தொகுத்து வழங்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சியின் டீஸரினை அவர் தனது ட்விட்டர் பக்கத்தினில் வெளியிட்டிருந்தார். அதனை தொடர்ந்து அண்மையில் அதன் புரமோவும் வெளியானது. இதன் டீஸர் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதையடுத்து, இதன் போட்டியாளர்கள் யாராக இருப்பார்கள் என்று பல வதந்திகள் பரவி வருகிறது.


இதையடுத்து, ஜூன் 17 ல் தேதி, இந்நிகழ்ச்சி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்த்தை தொடர்ந்து அதன் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றனர்.


இதையடுத்து, Bigg Boss 2- வின் முதல் போட்டியாளராக காமடி நடிகர் 'பவர் ஸ்டார்'' தேர்வு செய்யப்பட்டதையடுத்து, பல பிரபலங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இதில் கலந்து கொள்ள உள்ள பிரபலங்களின் பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது. 


இந்த பட்டியலில், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருந்த நடிகை சினேகா மற்றும் ரம்பாவின் பெயர் இடம் பெற்றுள்ளது. எனினும் தற்போது ரம்பா கர்பமாக இருப்பதாலும், சினேகா தெலுங்கில் ராம்சரண் படத்தில் கமிட் ஆகியுள்ளதாலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முன்பு சம்மதம் தெரிவித்திருந்தாலும் தற்போது கலந்துக்கொள்வது சந்தேகம் தான் என கூறப்படுகிறது. 


மேலும், இந்நிகச்சியில் வடிவேலு பாலாஜி, கலக்கப்போவது யாரு புகழ் பாலா போன்றவர்களும் கலந்து கொள்ள இருப்பதாகவும், தகவல் தெரிவிக்கின்றனர்.