தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீதா ராமன் : இன்றைய எபிசோட்


தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலில் வெள்ளிக்கிழமை எபிசோடில் ராம் IPS பயிற்சிக்கு கிளம்ப மகா சீதாவை பழிவாங்க மந்திரவாதியை பார்க்க போவதாக சொல்ல கல்பனா கிண்டலடித்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


மேலும் படிக்க | அண்ணா சீரியல்: பரணி, சண்முகத்தை சேர்த்து வைக்க வைகுண்டம் எடுக்கும் முடிவு, சௌந்தரபாண்டிக்கு ஷாக்!


அதாவது, மகா இல்ல சீதாவை பழிவாங்க இது ஒன்னு தான் நல்ல வழி என்று சொல்கிறாள். அடுத்து மகா மந்திரவாதியை பார்க்க வேண்டும் என்று பேசி கொண்டிருக்க மறுபக்கம் மந்திரவாதி ஒருவர் மகானு ஒருத்தங்க என்னை தேடுறாங்க, அவங்க கிட்ட இருந்து போன் வரும் என்று சொல்லி கொண்டிருக்க அதே போல் மகாவிடம் இருந்து போன் வருகிறது. 



அதன் பிறகு மந்திரவாதி அப்பாயின்மென்ட் கொடுக்க சீதாவும் அர்ச்சனாவும் வந்து சந்தித்து சீதாவை பழி வாங்கணும் என்று சொல்ல அவ வயித்துல ஒரு கரு வளருது என்று சொல்ல அதை மகா நம்ம மறுக்க சாமியார் என் மேலே நம்பிக்கை இல்லனா நீங்க கிளம்பி போங்க என்று கோபப்பட்டு துரத்தி விடுகிறார். 


வீட்டுக்கு வந்த பிறகு மகா நடந்த விஷயங்களை சொல்ல கல்பனா கிண்டலடிக்க சீதா திடீரென வாந்தி எடுக்க இவர்கள் ஷாக் ஆகின்றனர், என்னாச்சு என்று கேட்க சீதா தெரியல என்று சொல்கிறாள். இருந்தாலும் மகா சந்தேகப்பட்டு சீதாவை ஹாஸ்பிடல் அழைத்து செல்கிறாள். வீட்டில் உள்ள எல்லாரும் கிளம்பி செல்கின்றனர். அப்போது சீதாவை பரிசோதனை செய்த டாக்டர் கர்ப்பமாக இருப்பதாக சொல்ல மகா ஷாக் ஆகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


சீதா ராமன்: சீரியலை எங்கு பார்ப்பது?


சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 


மேலும் படிக்க | Best Thriller Movies: சிறந்த டாப் 5 பாலிவுட் சூப்பர் ஹிட் திரில்லர் படங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ