சீதா ராமன் அப்டேட்: சீதாவை வெளியே போக சொல்லும் சேது, சுபாஷ்..காத்திருக்கும் அதிர்ச்சி
Seetha Raman Today`s Episode Update:சீதாவை வெளியே போக சொல்லும் சேது, சுபாஷ்.. ராம் கொடுக்கப் போகும் அதிர்ச்சி - சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட்
தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.
சீதா ராமன் : இன்றைய எபிசோட்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன்.
இந்த சீரியலின் நேற்றைய எபிசோட்டில் சேது மற்றும் சுபாஷ் வெளியே வந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
ராமின் தங்கைகள் மூவரும் சீதா சொன்னபடி ட்ரடிஷனல் டிரஸ் போட மாட்டேன் என அடம்பிடித்து ரூமுக்குள் சென்ற நிலையில் சீதா ராமிடம் இது குறித்து சொல்ல அவன் நான் போய் அவங்க கிட்ட என்னன்னு கேட்கிறேன் இன்று கிளம்ப சீதா இங்க கோபப்பட்டா தான் அவங்க பயப்படுவாங்க என்று சொல்ல ராமும் சரி என்று சொல்ல எப்படி கோபப்படுவீர்கள் கோபப்பட்டு காட்டுங்க என்று அவனை நன்றாக ஏற்று விடுகிறாள்.
தங்கைகளிடம் கோவப்படும் ராம்
அதைத்தொடர்ந்து ராம் தங்கைகளிடம் ட்ரடிஷனல் டிரஸ் போட சொல்ல அவர்கள் மூவரும் இந்த ஆர்டர் போடுற வேலையெல்லாம் உன் பொண்டாட்டி கிட்ட வச்சுக்க எங்ககிட்ட வேண்டாம் என்று சொல்ல ராம் உச்சகட்ட கோபமடைந்து சாரை தூக்கி போட்டு உடைக்க இதை பார்த்து பயந்து ட்ரெடிஷனல் டிரஸ் போட ஒப்புக்கொள்கின்றனர்.
வீடு திரும்பும் சேது, சுபாஷ்
அதைத்தொடர்ந்து சேது மற்றும் சுபாஷ் இருவரும் வீட்டுக்கு வர மகா ஆரத்தி எடுத்து வரவேற்க கூப்பிட ராம் அவங்கள பார்க்கவே பிடிக்கலை என்று கோபப்பட சரி அப்போ நீ ரூமுக்கு போ என்று அனுப்பி வைத்து விடுகிறார்.
ராமுக்கு அதிர்ச்சி கொடுக்கும் சீதா
அடுத்ததாக சீதா ஆரத்தி தட்டை எடுத்து வருகிறாள்.
அப்போது மகா குழுவினர் அதை தூக்கி போட்டு இப்பவே நீ இந்த வீட்டை விட்டு வெளியே போகணும் என்று சத்தம் போடுகின்றனர்.
மீரா இப்போ என்ன செய்வது என கேட்க சீதா என்கிட்ட வேற ஒரு பிளான் இருக்கு என்று ரூமுக்கு சென்று ராமிடம் நான் இந்த வீட்டை விட்டு கிளம்புறேன் என்று சொல்ல அவன் அதிர்ச்சி அடைகிறான்.
என்னாச்சு என்று காரணம் கேட்க உங்க அப்பாவும் சித்தப்பாவும் என்னை வீட்டை விட்டு வெளியே போக சொல்லிட்டாங்க என்று சொல்ல ராம் கோபப்பட்டு அவர்களிடம் சண்டை போட கிளம்புகிறான்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
காணத்தவறாதீர்கள்
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
சீதா ராமன்: சீரியலை எங்கு பார்ப்பது?
சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.
மேலும் படிக்க | “எதிர்பார்த்த மாதிரி இல்லையே..” ரசிகர்களை ஏமாற்றிய ஜெயிலர்? ட்விட்டர் விமர்சனம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ