சீதா ராமன் அப்டேட்: மகாவுக்கு ராம் கொடுத்த அதிர்ச்சி.. வெளியே வரப்போகும் சீதா
Seetha Raman Today`s Episode Update: மகாவுக்கு ராம் கொடுத்த அதிர்ச்சி.. வெளியே வர போகும் சீதா - சீதாராமன் இன்றைய எபிசோட் அப்டேட்
தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.
சீதா ராமன் : இன்றைய எபிசோட்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன்.
இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மதுமிதாவை வீட்டுக்கு கூட்டி செல்ல சூரியா வந்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் நீ என்கூட வர வேண்டாம், நான் கட்டுன தாலியை கழட்டி கொடு என்று கேட்க மதுவும் கோபத்தில் கழட்டி கொடுக்க போக தடுத்து நிறுத்துகிறார் மீரா.
சீதா விரைவில் வெளியே வருவாள்: ராம்
தாலியை கழட்டி கொடுக்கிறது அவ்வளவு சாதாரண விஷயம் இல்லை என சொல்லி சமாதானம் செய்ய மதுவும் தாலியை கழட்டாமல் மனம் மாறுகிறார்.
பிறகு சூர்யா எழுந்து செல்ல மதுமிதாவும் பெரிதாக கண்டுகொள்ளாமல் இருக்கிறார். பிறகு ஜெயிலில் இருந்து ராம் வீட்டுக்கு வர மகா எங்க போயிட்டு வர என்ன கேட்க சீதாவை பார்க்க போன விஷயத்தை மட்டும் சூர்யா மேல எந்த தப்பும் கிடையாது இந்த வீட்ல இருக்கவங்க தான் யாரும் இதை எல்லாம் பிளான் பண்ணி பண்ணியிருக்காங்க என்று சொல்கிறான். மேலும் அவங்க யாருன்னு இன்னும் நாலு நாள்ல தெரிஞ்சு உள்ள போயிடுவாங்க சீதா வெளிய வந்துருவா என சொல்கிறான்.
சீதா உன்ன இப்படி எல்லாம் சொல்லி நம்ப வச்சிருக்கா என மகா சொல்ல ராம் அவ முத்தாரம்மன் மேல சத்தியம் பண்ணி சொன்னா என்று சொல்கிறான். இதைக் கேட்டு எல்லோரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
மேலும் படிக்க | தன்னைவிட 6 வயது கம்மியான ஹீரோவுக்கு ஜோடியாகும் திரிஷா!
ஒருவரை ஒருவர் மிஸ் செய்யும் சீதா ராம்
மறுபக்கம் சீதாவுடன் இருக்கும் பெண்மணி நான் கோபத்துல என் மாமியார் வீட்டுக்கு இங்க வந்துட்டேன் அவளும் செத்து போயிட்டா என் வாழ்க்கையின் செத்துப் போச்சு நீயும் அந்த மாதிரி தப்பு பண்ண கூடாது, உன்னுடைய புருஷனுக்கு புரிய வைக்க பாரு என எடுத்து சொல்ல சீதா இங்கே ராமை மிஸ் செய்ய வீட்டில் ராம் சீதாவை மிஸ் பண்ணுகிறான்.
அதிர்ச்சி அடையும் சேது, சுபாஷ்
அடுத்ததாக சேது மற்றும் சுபாஷ் இருவரும் வீட்டுக்கு வர அவர்களிடம் கோபப்படும் மகா இங்க நடந்த விஷயங்களை சொல்ல அதைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறார்கள்.
காணத்தவறாதீர்கள்
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய சீதாராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
சீதா ராமன்: : சீரியலை எங்கு பார்ப்பது?
சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.
மேலும் படிக்க | தனுஷின் 50வது படத்தில் இணைந்த காளிதாஸ் ஜெயராம்.. ஷூட்டிங் ஆரம்பம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ