தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீதா ராமன் : இன்றைய எபிசோட்


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். 


தூக்க மாத்திரை சாப்பிடும் மதுமிதா


இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதா ரூமில் இருந்து வெளியே வந்ததும் மதுமிதா தன்னுடைய குடும்ப புகைப்படம், சூர்யாவின் போட்டோ, அம்மாவின் போட்டோ, அப்பாவின் போட்டோ என ஒவ்வொன்றாக எடுத்து வைத்து பார்த்து அவர்களைப் பற்றிய நினைவுகளை சொல்லி வருத்தப்படுகிறாள்.



கண்ணீர் விட்டு ஒவ்வொரு மாத்திரையாக சாப்பிடுகிறாள். 



மேலும் படிக்க | Prabhas: திருப்பதியில் சாமி தரிசனம் செய்த ‘ஆதிபுருஷ்’ நடிகர்..!



கோவிலுக்கு போகும் ராம் சீதா


மறுபக்கம் சீதா மனசு சரியில்லை கோவிலுக்கு போயிட்டு வரலாம் என ராமை அழைக்க காலையிலேயே யாராவது கோவிலுக்கு போவாங்களா என அவன் வர மறுக்கிறான். பிறகு மீரா சீதாவுக்கு ஆறுதலாக பேச அதன் பிறகு ராம் சீதாவை கூட்டிக்கொண்டு கோவிலுக்கு செல்கிறான். 


கோவிலில் சாமியை வேண்டிக் கொண்டிருக்கும் சீதாவுக்கு ஏதோ தப்பாக நடக்கப் போவதாக தோன்ற அந்த சமயம் பார்த்து அங்கு செக்யூரிட்டி வர இவர்களை பார்த்து பயந்து நடுங்குகிறான். 


மேலும் படிக்க | பாலியல் வன்கொடுமை..தொடர் தோல்வி..எல்லாம் கடந்தும் அக்னி சிறகாக பறக்கும் பாவனா..!


மதுமிதாவுக்கு வீடியோ கால் செய்யும் சீதா


பிறகு செக்யூரிட்டி சீதாவிடம் உங்க அக்காவுக்கு ஏதாவது உடம்பு சரியில்லையா? என்னிடம் மாத்திரை வாங்கிட்டு வர சொன்னாங்க, அந்த மாத்திரையை யாரும் அவ்வளவு சீக்கிரம் கொடுக்க மாட்டேன்னு சொல்றாங்க என்று சொல்ல சீதா ராமிடம் அக்காவுக்கு ஏதோ பிரச்சனை அவர் கொஞ்ச நாளாகவே சரியில்ல என்று சொல்லி வீடியோ கால் போட மது உயிர் போகும் தருவாயில் போனை அட்டென்ட் செய்கிறாள். 


வருத்தப்பட்டு பேசும் மது


சீதா அக்கா எதுவும் பண்ணிக்காத தயவுசெஞ்சு கொஞ்சம் அமைதியா இரு என்று சொல்லிக் கொண்டிருக்க, மது இனிமே என்னால யாருக்கும் எந்த தொந்தரவும் இருக்காது நான் போறேன் என வருத்தப்பட்டு பேசுகிறாள். 


மயங்கி விழும் மதுமிதா


ராம் அர்ச்சனாவுக்கு போன் செய்ய வீட்டில் யாரும் போனை எடுக்காமல் இருக்க பிறகு சீதா நாமளே நேரடியாக வீட்டுக்கு சென்று அக்காவை ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்லலாம் என்று சொல்லி கிளம்பும்போது வீடியோ காலில் மதுமிதா மயங்கி கீழே விழுகிறாள். 


காணத்தவறாதீர்கள்


இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


சீதா ராமன்: : சீரியலை எங்கு பார்ப்பது?


சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 


மேலும் படிக்க | துர்காவுக்கு திருமணம் நடக்குமா? புஷ்பாவின் சதித்திட்டம் வெல்லுமா? மீனாட்சி பொண்ணுங்க அப்டேட்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ