சீதா ராமன் அப்டேட்: காத்திருக்கும் பெரிய ட்விஸ்ட்... ராம், சீதா உறவு முடிவுக்கு வருகிறதா?
Seetha Raman Today`s Episode Update: முடிவுக்கு வரும் ராம், சீதா உறவு.?? சூர்யாவால் காத்திருந்த அதிர்ச்சி - சீதாராமன் இன்றைய எபிசோட் அப்டேட்
தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.
சீதா ராமன் : இன்றைய எபிசோட்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன்.
ராஜசேகருக்கு போன் செய்யும் சீதா
இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. மகாலட்சுமி மதுவை ஏற்றி விட்டு சீதாவை அடிக்க வைத்த நிலையில் ரூமில் வருத்தத்தோடு இருக்கும் சீதா தன்னுடைய அப்பா ராஜசேகருக்கு போன் செய்து சூர்யாவை கைது செய்தது, மகா மதுவை வீட்டுக்கு அழைத்து வந்தது என இங்கு நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொல்கிறாள்.
சென்னைக்கு கிளம்பும் ராஜசேகர்
உடனே ராஜசேகர் நீ எதுவும் கவலைப்படாத நான் அங்க கிளம்பி வரேன், அவங்களுக்கு எல்லாருக்கும் எப்படி பதிலடி கொடுக்க வேண்டும் என்று எனக்கு தெரியும் என சொல்லி போனை வைத்துவிட்டு சென்னைக்கு கிளம்புகிறார்.
மேலும் படிக்க | Aditi Rao Hydari: மஞ்சள் மேகமாக மனதை மயக்கும் அழகு நாயகி அதிதி..!
சீதா மீது கோபப்படும் மதுமிதா
அதற்கு அடுத்ததாக ராம் மற்றும் மது இருவரும் சூர்யாவை பார்ப்பதற்காக ஸ்டேஷனுக்கு கிளம்புகிறார்கள்.
சீதா நானும் வரேன் என சொல்ல மதுமிதா எல்லாத்துக்கும் நீ தான் காரணம் நீ வர வேண்டாம் என கோபப்படுகிறாள். ராமும் இது எல்லாம் நீ தான் பண்ணுன்னு தெரிஞ்சா உனக்கும் எனக்குமான உறவு அவ்வளவுதான் என எச்சரித்துவிட்டு மதுவை அழைத்துக் கொண்டு ஸ்டேஷன் கிளம்புகிறான்.
மகா மற்றும் அர்ச்சனாவை குத்த வரும் சீதா
உடனே மகாலட்சுமி பார்த்தல்ல ராமும் உன்னை கைவிட்டுட்டான். எனக்கு இதெல்லாம் ரொம்ப ஈசி என சொல்லி வெறுப்பேத்த இன்னும் கடுப்பாகும் சீதா தனது கத்தரிக்கோலை எடுத்து வந்து மகா மற்றும் அர்ச்சனாவை குத்த முயற்சி செய்ய மீரா தடுத்து நிறுத்துகிறாள்.
நீ இவங்கள குத்தி கொலை பண்ணிட்டேன்னா இவங்க நல்லவங்களா ஆகிடுவாங்க, நீ ஜெயிலுக்கு போறதுனால யாருக்கு என்ன பிரயோஜனம்? இவங்களோட உண்மையான முகம் என்ன என்பதை ராமுக்கு தெரியப்படுத்தணும் என சொல்லி சீதாவை அழைத்துச் செல்கிறாள்.
அதனைத் தொடர்ந்து அர்ச்சனாவும் மகாலட்சுமியும் சீதா மீது போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் கொடுத்து விடலாம் என முடிவெடுக்க மீரா, ' நீங்க கம்ப்ளைன்ட் கொடுத்தீங்கன்னா அவ ஒன்னும் பண்ணல நீங்கதான் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினீங்கனு சொல்லிவிடுவேன்' என அதிர்ச்சி கொடுக்கிறாள்.
ராம் மற்றும் மதுமிதா இருவருக்கும் அதிர்ச்சி
மறுபக்கம் ஸ்டேஷனுக்கு வந்த ராம் அந்த கஞ்சா எப்படி வீட்டுக்குள் வந்தது என்று விசாரிக்க, சூர்யா அந்த பை சீதா கொண்டு வந்தது தான் என சொல்ல ராம் மற்றும் மதுமிதா இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
காணத்தவறாதீர்கள்
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
சீதா ராமன்: சீரியலை எங்கு பார்ப்பது?
சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ