Thalapathy 68: விஜய் - வெங்கட்பிரபு படத்தின் பூஜை எப்போது? வெளியானது லேட்டஸ்ட் அப்டேட்!

Thalapathy 68: 'தளபதி 68' படம் குறித்து வெளியாகியுள்ள கூடுதல் செய்திகளின்படி, படத்திற்கான பூஜை விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதியன்று நடைபெறும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : May 26, 2023, 09:51 AM IST
  • 'தளபதி 68' படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
  • ஆகஸ்ட் மாதத்தில் 'தளபதி 68' படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.
  • 'தளபதி 68' பட பூஜை ஜூன் 22ம் தேதியன்று நடத்தப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது
Thalapathy 68: விஜய் - வெங்கட்பிரபு படத்தின் பூஜை எப்போது? வெளியானது லேட்டஸ்ட் அப்டேட்! title=

Thalapathy 68: இத்தனை நாளாக விஜய் நடிக்கப்போகும் 'தளபதி 68' படம் குறித்து ரசிகர்களுக்கு இருந்து வந்த குழப்பம் தற்போது தெளிவாகியுள்ளது.  ஏஜிஎஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் 'தளபதி 68' படத்தை வெங்கட் பிரபு இயக்க, படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.  'தளபதி 68' படத்தை இயக்கப்போகும் இயக்குனர்களின் பட்டியலில் அட்லீ, கோபிசந்த் மலினேனி ஆகியோரின் பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில், இறுதியாக 'தளபதி 68' படத்தை இயக்கப்போவது வெங்கட் பிரபு தான் என்கிற அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.  தற்போது நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் 'லியோ' படத்தில் பிசியாக இருந்து வருகிறார், இப்படம் அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது.  ஒருபுறம் ரசிகர்கள் லியோ படத்தை காண எவ்வளவு ஆர்வமாக காத்திருந்தார்களோ, அதே அளவு ஆர்வத்தோடு 'தளபதி 68' படத்தின் அப்டேட்டையும் தெரிந்துகொள்ள எதிர்நோக்கி காத்திருக்கிருக்கின்றனர்.  'தளபதி 68' படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது.

மேலும் படிக்க | ஹன்சிகா மோத்வானிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபல நடிகர்?

நடிகர் எஸ்.ஜே.சூர்யா 'நண்பன்', 'மெர்சல்' மற்றும் 'வாரிசு' போன்ற விஜய்யின் படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.  இவரின் வில்லன் கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.  இது ஒருபுறமிருக்க தற்போது 'தளபதி 68' படம் குறித்து வெளியாகியுள்ள லேட்டஸ்ட் செய்தி என்னவென்றால், படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கவைக்க நயன்தாரா, தமன்னா, க்ரித்தி ஷெட்டி, கல்யாணி ப்ரியதர்ஷன் மற்றும் மிருணல் தாகூர் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், விரைவில் 'தளபதி 68' படத்தில் நடிக்கப்போகும் அந்த முக்கியமான நடிகை யார் என்கிற அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  தற்போது விஜய் நடித்துக்கொண்டிருக்கும் 'லியோ' படத்தின் படத்தின் பணிகள் முடிவடைந்ததும், ஆகஸ்ட் மாதத்தில் 'தளபதி 68' படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.  

மேலும் 'தளபதி 68' படம் குறித்து வெளியாகியுள்ள கூடுதல் செய்திகளின்படி, படத்திற்கான பூஜை விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதியன்று நடத்தப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.  லியோ படத்தின் பட பூஜை நிகழ்ச்சி எவ்வளவு சஸ்பென்சாக நடந்ததோ அதைப்போலவே, 'தளபதி 68' படத்தின் பூஜை நிகழ்ச்சியும் சஸ்பென்சாக நடக்கும் என்று கூறப்படுகிறது.  பட பூஜை நடந்து வெகு நாட்கள் கழித்தே இந்த புகைப்படங்கள் எல்லாம் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.  படத்தின் பணிகள் விறுவிறுப்பாக தொடங்கப்பட்டு படம் 2024ம் ஆண்டு கோடை விடுமுறையில், அதாவது ஏப்ரல் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.  செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ மற்றும் தி ரூட் இணைந்து தயாரிக்கும் 'லியோ' என்கிற மெகா ஆக்ஷன் படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் விஜய்யுடன் சேர்ந்து த்ரிஷா நடிக்கிறார்.  மேலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் சஞ்சய் தத், அர்ஜுன், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ், பிக்பாஸ் ஜனனி, இயக்குனர்கள் கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் மிஸ்கின் ஆகியோர் நடிக்கின்றனர்.  அனிரூத் இசையமைக்கும் இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்ஸா ஒளிப்பதிவு செய்கிறார்.

மேலும் படிக்க | Japan Update: கார்த்தி ரசிகர்களுக்கு ட்ரீட்..4 ஹீரோக்கள் சேர்ந்து வெளியிட்ட ‘ஜப்பான்’ இண்ட்ரோ வீடியோ..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News