தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீதா ராமன் : இன்றைய எபிசோட்


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். 


இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் வீட்டிற்கு வந்த ராம் சீதாவுக்கு குல்பி வாங்கி வந்து கொடுத்த நிலையில் சீதா ராமுக்காக தைத்த போலீஸ் ட்ரெஸ்ஸை எடுத்து கொடுத்து சர்ப்ரைஸ் செய்கிறாள். 


போலீஸ் உடையில் ராம்


இதையடுத்து ராம் போலீஸ் டிரஸ் போட்டு இங்கும் அங்கும் நடந்து காட்ட அந்த சமயம் ராமின் மாமா துரை இதை பார்த்து விட்டு பயந்து ஓட சீதா இதை பார்த்து சிரிக்கிறாள். 



அதிர்ச்சி அடைந்த மகா


மறுநாள் காலையில் சீதா சாப்பிட்ட குல்பி செட்டாகாமல் வாந்தி எடுக்க இதை பார்த்த மகா அதிர்ச்சி அடைகிறாள். சீதா ராமின் குழந்தையை வயிற்றில் வச்சிட்டு வாந்தி எடுப்பேன் என ஏற்கனவே விட்ட சவால் அவளுக்கு ஞாபகம் வர மகாவுக்கு டென்ஷன் இன்னும் அதிகமாகிறது. 



மேலும் படிக்க | அமுதாவும் அன்னலட்சுமியும்: ஜட்ஜ் கொடுத்த அதிரடி தீர்ப்பு.. குமரேஷனுக்கு காத்திருந்த ஆப்பு


ராம் சொன்ன பதிலை கேட்ட அனைவருக்கும் அதிர்ச்சி


பிறகு சீதாவிடம் வந்து என்னாச்சு என கேட்க அவள் சாதாரணமாக உங்க பையன் கிட்டயே கேளுங்க என்று சொல்ல மகாவுக்கு டென்ஷன் இன்னும் அதிகமாகிறது. பிறகு ராமிடம் சென்று என்னாச்சு என கேட்க அவனும் குல்பியை மனதில் வைத்து கொண்டு நான் தான் காரணம் என சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். 


உண்மையை சொல்லும் சீதா


அதன் பிறகு மீரா வந்து நீ பெரிய ஆள் தான், சொன்ன மாதிரியே செஞ்சிட்ட என சொல்லி சந்தோஷப்பட சீதா இது குல்பியால் வந்த வாந்தி என்ற உண்மையை சொல்கிறாள். மேலும் டாக்டர் வீட்டுக்கு வந்து சீதாவை பரிசோதனை செய்ய மகாவுக்கு பீபி அதிகமாகி கொண்டே இருக்கிறது. 



நேற்றைய எபிசோடில் நடந்தது என்ன?


நேற்றைய எபிசோடில் ஆல்பம் பார்க்க வந்த சூர்யா சீதாவை கோபித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பிய நிலையில் சீதா ராமை கூட்டிக்கொண்டு அவனது அம்மாவின் கல்லறைக்கு சென்று வேண்ட இதை மீரா பார்த்து விடுகிறாள். அதன் பிறகு மீரா சீதாவிடம் ‘நீ எதுக்கு இதெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்க? இவங்க யாரும் உன்னுடைய நல்ல மனசை புரிஞ்சுக்க மாட்டாங்க’ என சொல்ல, ‘நான் யாரையும் திருத்த வரல, ஆனால் மகா எல்லார் விருப்ப படியும் நடந்து கொள்ளாமல் அவங்க விருப்பப்படி தான் எல்லாரும் நடந்துக்கணும்னு எதிர்பார்க்கிறாங்க. நான் அந்த இடத்துக்கு வந்து எல்லா விருப்பப்படியும் நடந்துக்க வைக்க போறேன்’ என சொல்கிறாள். அதன் பிறகு மகாலட்சுமி சூர்யாவின் ஓனரை சந்தித்து 2 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்து இதை நீங்கள் சூர்யாவுக்கு கொடுப்பது போல கொடுத்து அவனது மனைவியை இங்கே கூட்டி வர வையுங்கள் என சொல்கிறாள். சூர்யாவின் ஓனர் இதை நீங்களே கொடுக்கலாமே என கேட்க சூர்யா நான் கொடுத்தால் வாங்க மாட்டான் என சொல்லி சமாளிக்கிறாள். 


அதன் பிறகு சீதா ராம் இருப்பது போல நினைத்து அவனுக்கு போலீஸ் டிரஸ் தைக்க அளவு எடுத்துக் கொண்டிருக்கிறாள். இதை பார்த்த மீரா இங்கு யாரு இருக்காங்க நீ என்ன பண்ணிட்டு இருக்க என கேட்கிறாள். ராம் இங்க தான் இருக்காரு என சீதா சொல்ல உனக்கு பைத்தியம் பிடிச்சிருக்கா என மீரா சொல்கிறாள். 


அதனைத் தொடர்ந்து மகாலட்சுமி கொடுத்த பணத்தை சூர்யாவின் ஓனர் அவனிடம் கொடுத்து மதுமிதாவை இங்கே அழைத்து வர சொல்ல, சூர்யாவும் பணத்தை வாங்கிக் கொள்கிறான். அவனது ஓனர் இந்த விஷயத்தை மகாவுக்கு போன் போட்டு சொல்ல, மகா இது குறித்து பேசிக் கொண்டிருப்பதை சீதா கவனித்து விடுகிறாள். சீதா மகாவின் திட்டம் முழுமையாக புரியாமல் நீங்க சூர்யாவை வைத்து ஏதோ திட்டம் போடுகிறீர்கள் என்று மட்டும் தெரியும் நான் ராமை வச்சு ஒரு திட்டம் போடுறேன் என மனதுக்குள் சவால் விடுகிறாள்.


காணத்தவறாதீர்கள்


இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


சீதா ராமன்: : சீரியலை எங்கு பார்ப்பது?


சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 


மேலும் படிக்க | Rashmika Mandanna: வெள்ளை நிற உடையில் ‘நேஷனல் க்ரஷ்’ ராஷ்மிகா மந்தனா!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ