அமெரிக்காவை சேர்ந்த ஹாலிவுட் பிரபலம் மோர்கன் ப்ரீமேன் துணை நடிகைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக குற்றம்சாட்டப் பட்டுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரபல ஹாலிவுட் நடிகர், தயாரிப்பாளர், தொகுப்பாளர் மோர்கன் ப்ரீமேன்(80), படப்பிடிப்பின் போது அவருடன் நடித்த இணை நடிகைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இதனை நிறுபிக்கு வகையில் அவரும் இந்த சம்பவங்களுக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.


சிறந்த குணச்சித்திர நடிகரான மோர்கன் ‘ப்ரீமேன் தி ஸ்டீர்ட் ஸ்மார்ட்’, ‘மில்லியன் டாலர் பேபி’, ‘லூசி’, ‘தி லீகோ மூவி’, ‘நவ் யு ஸீ மி’ உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். ‘கோல்கடன் குளோப்’ விருது, ‘ஆஸ்கர் விருது’, ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது என ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.


இந்நிலையில், நடிகர் மோர்கன் ப்ரீமேன் மீது பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்ட நிலையில் இதுகுறித்து CNN புலனாய்வு விசாரணை நடத்தியது. இதில் அவர் படிப்பிடிப்பின் போது நடிகைகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இந்த குற்றச்சாட்டினை ஒப்புக்கொள்ளும் வகையில் மோர்கனும் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.


முன்னதாக கனடாவில் வான்கூவர் நகரப் போக்குவரத்து துறை, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விளம்பரங்களுக்கு மோர்கனின் குரலை பயன்படுத்தி வந்தது. பின்னர் நடிகளின் மீதான பாலியல் குற்றச்சாட்டினை இவர் ஒப்புக்கொண்டதினை அடுத்து மோர்கனுடனான ஒப்பந்தத்தினை வான்கூவர் நகரப் போக்குவரத்து துறை ரத்து செய்துக்கொண்டது.


மோர்கனின் மன்னிப்பிற்கு பிறகு இவரை குறித்து ட்விட்டரில் ரசிகர்கள் எதிர்ப்பு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.