சாகுந்தலம் வசூல் நிலவரம்: இயக்குநர் குணசேகர் இயக்கத்தில் சமந்தா நடிப்பில் கடந்த 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘சாகுந்தலம்’. மலையாள நடிகர் தேவ் மோகன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் அதிதிபாலன், கவுதமி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மணிசர்மா இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் இப்படம் உருவானது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் வெளியான சாகுந்தலம் படம் ரசிகர்களிடையே பெரும்பாலும் எதிர்மறை விமர்சனங்களையே சந்தித்தது. அதன்படி இரண்டு நாள் வசூல் நிலவரம் படி, இப்பம் ரூ 1.5 கோடி மட்டுமே வசூலித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இரண்டு நாட்களுக்கான மொத்த வசூல் ரூ.5 கோடியாகிள்ளது.


மேலும் படிக்க | ராஷ்மிகாவின் புகைப்படத்தை வச்சு செய்யும் நெட்டிசன்கள் - ஏன் தெரியுமா?


சாகுந்தலம் திரைப்படம் வெளிவந்து மூன்று நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில், இதுவரை ரூ. 10 கோடி கூட வசூல் செய்யாததால், தயாரிப்பாளருக்கு கண்டிப்பாக நஷ்டம் ஏற்படும் என கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் திரைக்கதை சொதப்பலாக இருப்பதாக சோசியல் மீடியாவில் ரசிகர்கள் விமர்சனம் செய்து வருவதே வசூல் குறைந்து விட்டதற்கு காரணம் என்ற தகவல்களும் வெளியாகி உள்ளன.


அந்த வகையில் முதல் நாளில் ரூ.5 கோடி வசூலித்த இப்படம் இரண்டாம் நாளில் அதில் 50 சதவீதம் கூட வசூலிக்கவில்லை. 2-ம் நாளில் இப்படம் வெறும் ரூ.1.5 கோடி மட்டுமே வசூலித்து இருந்தது. இதேநிலை நீடித்தால் இப்படம் படுதோல்வியை சந்திக்கும் என கூறப்படுகிறது. 


தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா. இவர் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருப்பார் என்பதும் அவருக்கு இன்ஸ்டாகிராமில் சுமார் 22 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர். மேலும் மயோசிடிஸ் நோய் பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ள நடிகை சமந்தா, மீண்டும் சினிமாவில் தனது முழு கவனத்தை செலுத்தி வருகிறார். அத்துடன் சமந்தா நடிப்பில் கடந்தாண்டு ரிலீஸ் ஆன காத்துவாக்குல ரெண்டு காதல், யசோதா ஆகிய இரண்டு திரைப்படங்களும் பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூலை அள்ளி வெற்றிவாகை சூடியது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | விமல் நடிக்கும் 'தெய்வ மச்சான்' - ரிலீஸ் எப்போது தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ