ராஷ்மிகாவின் புகைப்படத்தை வச்சு செய்யும் நெட்டிசன்கள் - ஏன் தெரியுமா?

Rashmika Without Makeup Photo: ராஷ்மிகா இன்ஸ்டாகிராமில் கியூட்டாக மேக்-அப் இல்லாமல் பதிவிட்டிருந்த புகைப்படத்தை, நெட்டிசன்கள் கமெண்டில் கேலி செய்து வருகின்றனர்.

Written by - Sudharsan G | Last Updated : Apr 16, 2023, 09:37 PM IST
  • ராஷ்மிகாவை இன்ஸ்டாகிராமில் 3.78 கோடி பேர் பின்தொடர்கின்றனர்.
  • இவர் தமிழில் விஜய் உடன் வாரிசு படத்தில் கடைசியாக நடித்திருந்தார்.
ராஷ்மிகாவின் புகைப்படத்தை வச்சு செய்யும் நெட்டிசன்கள் - ஏன் தெரியுமா? title=

Rashmika Without Makeup Photo: பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா அவரது கியூட்டான எக்ஸ்பிரஷன்களுக்கு பெயர் பெற்றவர். இவர் தெலுங்கு, கன்னடம், இந்தி, தமிழ் படங்களில் நடித்து பரவலாக அறியப்படுகிறார். அவருக்கு சமூக வலைதளங்களில் பலமான ரசிகர்கள் உள்ளனர். 

ராஷ்மிகா தனிப்பாட்ட வாழ்க்கையாலும், சினிமாவினாலும் அடிக்கடி தலைப்புச் செய்திகளில் இடம்பிடிப்பவர். இருப்பினும், சமீபத்தில் அவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில், மேக்கப் இல்லாத ஒரு படத்தை வெளியிட்டார். அந்த புகைப்படத்தை தொடர்ந்து, நெட்டிசன்கள் ராஷ்மிகாவை கேலி செய்து வருகின்றனர். 

நட்சத்திரங்கள் தங்கள் ரசிகர்களிடம் இருந்து நிறைய அன்பையும் ஆதரவையும் பெறுகிறார்கள். ஆனால் அதே நேரத்தில், அவர்கள் எப்போதாவது தங்கள் ரசிகர்களைக் கவர தவறினால் ட்ரோல்களையும் எதிர்கொள்கின்றனர். பிரபல நடிகை ரஷ்மிகா மந்தனாவுக்கும் அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.

மேலும் படிக்க | திருமணம் குறித்து மனம் திறந்த கீர்த்தி சுரேஷ்... என்ன சொன்னாருனு பாருங்க?

நடிகை ராஷ்மிகா சமீபத்தில் தனது சமூக வலைதளப்பக்கத்தில், மேக்கப் இல்லாத படத்தை வெளியிட்டார். இந்த படத்தில், நடிகை பச்சை நிற ஸ்வெட்டரை அணிந்து அதை சிறிய செயின் மற்றும் காதணிகளுடன் இருந்தார். நடிகையின் முகத்தில் பாதி, அவரின் தலைமுடியால் மூடப்பட்டிருந்தது. இருப்பினும், அந்த புகைப்படம் கிளோஸ்-அப் ஷாட்டாக எடுக்கப்பட்டது. 

தனது படத்தைப் பகிர்ந்த ராஷ்மிகா, "எனக்கு எப்படி உதடுகளை பிதுக்குவது என்று தெரியவில்லை, எனவே ஒரு நேரடியான முத்தம்..." என்று எழுதியுள்ளார். ராஷ்மிகா மந்தனாவின் இந்த புகைப்படம் நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகியுள்ளது. அவர்கள் ராஷ்மிகாவை கேலி செய்யத் தொடங்கினர். அங்கு அவரது ரசிகர்கள் சிலர் முகத்தில் முடி இருப்பது இயல்பானது என்று தெளிவுபடுத்தியுள்ளனர். அதே சமயம் சிலர் அதற்கு 'தாடி மீசை' என்று பெயர் வைத்து கேலி செய்தனர். 

"நீங்கள் உங்கள் முகத்தில் இருக்கும் முடிகளை ஷேவ் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன், ஆனால் இது மிகவும் கியூட்டாக இருக்கிறது" என்று ஒரு பயனர் கமெண்ட் செய்துள்ளார். நடிகையின் தாடையை வட்டமிட்ட மற்றொரு பயனர், "ரஜினியின் தலை முடியை விட உங்கள் முகத்தில் அதிக முடி உள்ளது" என்று கருத்து தெரிவித்துள்ளார். மற்றொரு பயனர் கருத்துப் பிரிவில், "தோல் எப்படி இருக்கிறது பாருங்கள், தயவுசெய்து மேக்கப்பைப் பயன்படுத்துங்கள்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 
மேலும் படிக்க | விமல் நடிக்கும் 'தெய்வ மச்சான்' - ரிலீஸ் எப்போது தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News