இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் வாழ்க்கை வரலாறு படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமான டாப்சி, இந்தியில் பிங்க், நாம் ஷபானா, முல்க், பத்லா  உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தார். இவர் தற்போது மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்து வருகிறார். 


மித்தாலி ராஜ் 1999-ஆம் ஆண்டிலிருந்து இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடி வருகிறார். மகளிர் கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி இந்தியாவின் சிறந்த வீராங்கனையாக பார்க்கப்படும் இவர் கிரிக்கெட் போட்டியில் 20 ஆண்டுகளைக் கடந்த ஒரே வீராங்கனை என்ற பெயரை எடுத்தவர்.


இந்நிலையில் தற்போது இவரது வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டு வருகிறது. டாப்ஸி மித்தாலி ராஜ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'சபாஷ் மித்து' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை  'லம்கே', 'பர்சானியா' மற்றும் 'ராயீஸ்' உள்ளிட்ட படங்களை இயக்கிய ராகுல் தொலாகியா இயக்கவுள்ளார். 


 



 


 



 


 


வயகாம் 18 நிறுவனம்  தயாரித்து வரும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளனர். இந்த படம் 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி 5-ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர்.