வாரிசு ஷூட்டிங்கில் விஜயை சந்தித்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் - பிரபல இயக்குநர்
வாரிசு படத்தில் விஜய் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கான் மற்றும் இயக்குநர் அட்லீ ஆகியோர் அவரை படப்பிடிப்பு தளத்தில் நேரில் சந்தித்துள்ளனர்.
வம்சி பைடிபல்லி இயக்கத்தில் நடிகர் விஜய் ‘வாரிசு’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார் மற்றும் பிரபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் நடித்துள்ளது. விறுவிறுப்பாக சூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 2023 ஆம் ஆண்டில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கல் வெளியீடாக இருக்குமா? என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், அதற்கு வாய்ப்பில்லை என்றே சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க | ஒரு நாளுக்கு இவ்வளவா?... இந்தியனுக்கு கட்டப்பா சத்யராஜ் கொடுத்த ஷாக்
இந்த நிலையில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கான் மற்றும் இயக்குநர் அட்லீ ஆகியோர் வாரிசு படப்பிடிப்பு தளத்துக்கு சென்றுள்ளனர். அங்கு நடிகர் விஜய்யை சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பின்போது ஜவான் படத்தின் சில முக்கியமான காட்சிகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது நடிகர் விஜய், ஷாருக்கானின் ஜவான் படத்தில் கேமியோ ரோலில் நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. அட்லீ பிறந்தநாளின்போது விஜய் நேரடியாக ஜவான் படப்பிடிப்பு தளத்துக்கு சென்று அட்லீயை வாழ்த்தியதுடன் ஷாரூக்கானுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இந்த சூழலில் தான் விஜயை, அட்லீ மற்றும் ஷாரூக்கான் சந்தித்து இருக்கின்றனர். இதன்மூலம் ஜவான் படத்தில் விஜய் கேமியோ ரோலில் நடிப்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. ஜவான் படத்தில் நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஷாரூக்கான் இரட்டை வேடங்களில் நடிக்கும் இந்தப் படம் புனே, மும்பை, ஹைதராபாத் மற்றும் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த படத்தின் சூட்டிங் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. அனிரூத் இசையமைக்கிறார். பிரியாமணி மற்றும் யோகி பாபு ஆகியோரும் படத்தில் உள்ளனர்.
மேலும் படிக்க | கிடப்பில் போடப்பட்டதா வணங்கான்?... உண்மையை உடைத்த நடிகர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ