ஷாருக்கான் தனது சமூக வலைதள பக்கத்தில், போஸ்டர் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். "குச் குச் ஹோனே வாலா ஹை, ஓடிடி கி துனியா மே" என்று குறிப்பிட்டிருந்தார். அதன் அர்த்தம் ஓடிடி உலகத்தில் ஏதோ நடக்கவிருக்கிறது என்பதாகும். இவரது இந்த பதிவிற்கு முன்னணி இயக்குநர்கள், நடிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஷாரூக் கான் மற்றும் அவரது தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மெண்ட் இணைந்து எஸ்.ஆர்.கே+ ஓடிடி சேவை குறித்த அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர். ஷாருக் முன்பு தனது ஓடிடி குறித்த இரண்டு விளம்பர வீடியோக்களைப் பகிர்ந்திருந்தார். அப்போது ரசிகர்கள் அவர் ஏதோ படத்தின் புரோமோஷன் பதிவை பதிவிடுகிறார் என்று யூகித்தனர்.


மேலும் படிக்க | சிரஞ்சீவியின் காட்ஃபாதர் படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர்


ஆனால் இப்போது அவர் தனது சொந்த ஓடிடி செயலியை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதன்படி தனது சொந்த ஓடிடி தளத்தைத் தொடங்கிய முதல் பாலிவுட் நட்சத்திரம் ஷாருக் கான் ஆவார்.


அவர் போஸ்டரைப் பகிர்ந்தவுடன், ரசிகர்கள் லைக்குகளை அள்ளி வழங்கினர். 2018 இல் கடைசியாக வெளியான 'ஜீரோ' படத்திற்கு பிறகு திரையில் இருந்து விலகிய 56 வயதான நடிகருக்கு அவரது நண்பர்கள் மற்றும் திரைப்பட இயக்குநர்களிடமிருந்து தற்போது வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.


 



 


நடிகர் சல்மான் கான், ஷாருக்கின் ட்வீட்டை பகிர்ந்துள்ளார். அதில், "இன்றைய பார்ட்டி நீதான் தரவேண்டும் ஷாருக் என்றும், புதிய ஓடிடி செயலியான SRK+க்கு வாழ்த்துகள் என்றும்  பதிவிட்டிருந்தார். 


இதேபோல், திரைப்பட தயாரிப்பாளர் அனுராக் காஷ்யப், புதிய ஓடிடி செயலியில் சூப்பர் ஸ்டாருடன் இணைவதாக ட்வீட் செய்துள்ளார். அதில், "கனவு நனவானது! ஷாருக்கின் புதிய ஓடிடி செயலியான SRK+ இல் இணைகிறேன்." என்று பதிவிட்டிருந்தார். 


மேலும் படிக்க |‘பீஸ்ட்’டில் விஜய்யின் காஸ்ட்யூம் இதுவா?!


இதேபோல், நடிகைகளான கத்ரினா கைஃப் - கே பியூட்டி என்ற அழகு சாதன பொருட்களை தயாரிக்கும் கம்பேனியை தொடங்கியிருந்தார். நயன்தாரா டாக்டர் ரெனிடா ராஜனுடன் இணைந்து லிப் பாம் கம்பேனியைத் தொடங்கினார், பிரியங்கா சோப்ரா அனமொலி என்ற கூந்தல் பராமரிப்பு பொருட்களை தயாரிக்கும் கம்பேனியைத் தொடங்கினார்.


நடிகர் ரித்திக் ரோஷன் ஆடை கம்பேனியை தொடங்கினார் இன்னும் பலர் தங்களின் நடிப்பு திறன் சாராத பிற கம்பேனிகளையும் திறன்பட நிர்வகித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR