தமிழில் விஜய்யை வைத்து அடுத்தடுத்து ஹிட் படங்களைக் கொடுத்த அட்லீ, அடுத்ததாக ஷாரூக்கானுடன் ஜோடி சேர்ந்துள்ளார். இந்தப் படத்தில் தமிழின் பிரபலமாக இருக்கும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். அண்மையில் திருமணம் முடிந்த நயன்தாரா, பிரியாமணி, யோகிபாபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துக் கொண்டிருக்கின்றனர். படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டது. இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | சமந்தா நடனத்தில் மயங்கிய சல்மான்கான் - பாலிவுட் என்டிரிக்கு கிரீன் சிக்னல்


இந்நிலையில், ஜவான் படத்தின் பிஸ்னஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்ற இரண்டு நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸடார் மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனங்கள் கோதாவில் மோதின. அண்மையில் தமிழில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த விக்ரம் படத்தை கைப்பற்றிய மகிழ்ச்சியில் இருக்கும் டிஸ்னி நிறுவனம், அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்திருக்கும் ஜவான் படத்தையும் வாங்கிவிட முயற்சி செய்திருக்கிறது. 



ஆனால், நெட்பிளிக்ஸ் நிறுவனமும் கோதாவில் குதிக்க கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் வென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த நிறுவனம் 120 கோடி ரூபாய் கொடுத்து ஜவான் படத்தின் டிஜிட்டல் உரிமையைக் கைப்பற்றியிருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாக்ஸ் ஆஃபீஸில் ஜவான் படம் ஹிட் அடித்தால், அடுத்த படத்தையும் பான் இந்தியா படமாக இயக்க அட்லி திட்டமிட்டிருக்கிறாராம். அட்லி குறித்து ஷாரூக்கான் பேசும்போதுகூட, கமர்ஷியல் படங்களை எடுப்பதில் கைதேர்ந்தவராக இருக்கிறார் என பாராட்டியுள்ளார். அட்லியின் கமர்ஷியல் பிளான் பிடித்துப்போகவே, இந்தப் படத்தில் நடிக்கவும் ஒப்புக்கொண்டாராம். 


மேலும் படிக்க | இனிமே எல்லாமே ரெட் ஜெயன்ட்தானா?! அடுத்த படத்தை வெளியிடும் உதயநிதி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR