உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் விஜய் ஆண்டனி பட நடிகை! என்ன ஆச்சு?
Shaitan Movie Actress Madhumitha Nair Accident : விஜய் ஆண்டனியின் ‘சைத்தான்’ படத்தில் நாயகியாக நடித்திருந்த அருந்ததி நாயர், சாலை விபத்தில் சிக்கியுள்ளார். இந்த செய்தி, ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Shaitan Movie Actress Madhumitha Nair Accident : தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருபவர், அருந்ததி நாயர். இவர், விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘சைத்தான்’ படத்திலும் நாயகியாக நடித்திருக்கிறார். இவருக்கு தற்போது சாலை விபத்து ஏற்பட்டுள்ளதாக அவரது நண்பர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
விஜய் ஆண்டனி பட நாயகி:
கேரள மாநிலத்தை சேர்ந்த நடிகை அருந்ததி நாயர். இவர், தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து, தென்னிந்திய திரையுலகின் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கிறார். இவர், முதன் முதலில் 2014ஆம் ஆண்டு வெளியான ‘பொங்கியெழு மனோகரா’ என்ற தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு, விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும் என்ற படத்தில் நந்தினி என்ற கேரக்டரில் நடித்தார். இதையடுத்து இவரை அனைவருக்கும் பிரபலப்படுத்திய படம், ‘சைத்தான்’.
இந்த படம், 2016 ஆம் ஆண்டு வெளியானது. இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாகவும், வில்லி கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். ‘விஜயலக்ஷமி’ என்ற இவரது கதாப்பாத்திரம் அப்போது ரசிகர்கள் மத்தியில் பெரிதாக பேசப்பட்டது. அருந்ததி நாயரின் நடிப்பு திறமையை சினிமா விமர்சகர்கள் பலரும் பாராட்டினர்.
மேலும் படிக்க |துளி கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் நடிகை திரிஷா.. என்ன அழகு டா
விபத்தில் சிக்கிய நடிகை..
அருந்ததி நாயர், கேரளாவில் உள்ள கோவளத்தில் சாலை விபத்தில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கோவளத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அருந்ததி நாயரின் தோழி, கோபிகா அனில் என்பவர் இன்ஸ்டாவில் ஒரு பதிவினை வெளியிட்டிருக்கிறார்.
அதில், தனது தோழி நேற்று (மார்ச் 16) சாலை விபத்தில் சிக்கியதாகவும், மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். இவருக்கு தற்போது வெண்டிலைட்டரில் சிகிச்சை கொடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். தங்களால் முடிந்த வரை, அவர் உயிரை காப்பாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் சிகிச்சைக்கு பண உதவி தேவைப்படுவதாகவும் உதவி கேட்டு இந்த பதிவை வெளியிடுவதாகவும் தெரிவித்தார். இது, அவரது குடும்பத்தினருக்கும் உதவும் எனவும் தெரிவித்திருக்கிறார். இந்த பதிவில், கூகுள் பே எண், உதவி புரிவதற்கான வங்கி எண்கள் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.
மலையாள சினிமாவிலும் நடிக்கும் அருந்ததி நாயர்..
அருந்ததி நாயர், மலையாள நடிகையாக இருந்தாலும், 2018ஆம் ஆண்டுதான் அந்த திரையுலகிற்குள் அடியெடுத்து வைத்தார். 2018ஆம் ஆண்டு வெளியான ‘ஓட்டக்காரு காமுகன்’ படத்தில், வில்லன் நடிகர் ஷைன் டாம்ஸ் சாக்கோவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். சைத்தான் படத்தை தொடர்ந்து கன்னி ராசி, பிஸ்தா உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், கடைசியாக கடந்த ஆண்டு ஆயிரம் பொற்காசுகள் படத்தில் பூங்கோதை என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
இவர் அடுத்து நடித்த ‘யாவரும் வல்லவரே’ படம், இம்மாதம் 15ஆம் தேதி வெளியாக இருந்தது. இதில் அவர் சமுத்திரக்கனி, ரித்விகா உள்ளிட்டோருடன் இணைந்து நடித்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ