Meetha Raghunath: ‘குட் நைட்’ நாயகி மீதா ரகுநாத்திற்கு திருமணம் முடிந்தது! வைரல் போட்டோக்கள் இதோ..

Good Night Movie Actress Meetha Raghunath Marriage Photos: குட் நைட் பட நாயகி மீதா ரகுநாத்திற்கு திருமணம் முடிந்த நிலையில், அவர் தனது கல்யாண புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். 

 

Good Night Movie Actress Meetha Raghunath Marriage Photos Latest News In Tamil : கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் பலத்த வரவேற்பினை பெற்ற படங்களுள் ஒன்று, குட் நைட், இந்த படத்தில் மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மீதா ரகுநாத் நடித்திருந்தார். சுருள் முடியுடன் அழகிய சிரிப்புடன் இருக்கும் இவரது தோற்றம், எளிமையான பக்கத்து வீட்டு பெண் போல தோன்றியதால் பலருக்கு இவரை மிகவும் பிடித்திருந்தது. இந்த நிலையில், இவருக்கு தற்போது திருமணம் நடைப்பெற்றுள்ளது. இந்த திருமணம் புகைப்படங்களை, தற்போது மீதா ரகுநாத் தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்திருக்கிறார். அவை வைரலாகி வருகின்றன. 

1 /7

தமிழ் திரையுலகில் தற்போது வளர்ந்து வரும் கதாநாயகிகளுள் ஒருவராக இருப்பவர், மீதா ரகுநாத். சுருள் முடியும், எளிமையான தோற்றமும் கொண்ட பெண்ணாக இருக்கும் இவர் கடந்த ஆண்டு வெளியான ‘குட் நைட்’ படம் மூலம் பரவலாக அறியப்பட்டார். 

2 /7

குட் நைட் படத்தில் நடிப்பதற்கு முன்பாகவே, மீதா ‘முதல் நீ முடிவும் நீ’ என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கிஷன் தாஸ் நடித்தார். இந்த படம், 2022ஆம் ஆண்டு வெளியாகி இளசுகள் மத்தியில் பரவலாக பேசப்பட்டது. இந்த படத்தில் இருந்தே தமிழ் இளைஞர்களுக்கு மீதாவின் மீது ஒரு க்ரஷ் இருந்து வந்தது. 

3 /7

மீதா ரகுநாத், தான் நடித்த இரண்டு திரைப்படங்கள் மூலமும் பரவலாக பேசப்பட்டதால் இவர் மென்மேலும் படங்களில் முன்னணி கதாநாயகர்களுடன் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில்தான் அவர் மீது அன்பு கொண்டிருந்த ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் ஒரு செய்தி வெளிவந்தது. 

4 /7

மீதா ரகுநாத்திற்கு, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது. இந்த திருமணம், அவரது சொந்த ஊரான ஊட்டியில் நடைப்பெற்றது. இவர் திருமணம் செய்து கொள்ளப்போவது யார் என்பது குறித்த தகவல் அப்போது வெளிவராமல் இருந்தது. 

5 /7

தனக்கு திருமணம் முடிந்துள்ளதை மீதா ரகுநாத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். மீதா, தனது சமீபத்திய பதிவில் தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு தனது மகிழ்ச்சியை தெரிவித்திருக்கிறார். 

6 /7

மீதா, தனது திருமண புகைப்படங்களை வெளியிட்டுள்ளதை ஒட்டி, அவருக்கு நடிகர் கிஷன் தாஸ், உள்ளிட்ட பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

7 /7

மீதாவின் திருமண பதிவில், அவரது ரசிகர்களும் புதுமண தம்பதியனருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.