80-90களில் கவர்ச்சி நடிகையாக இருந்தவர், ஷகிலா. இவர் தான் அனுபவித்த பாலியல் கொடுமை குறித்து ஒரு நேர்காணலில் பேசியுள்ளார். இந்த சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஷகீலா:


படத்தின் நாயகிகளே கவரச்சியாக நடித்து வரும் இந்த ட்ரெண்டிங் உலகிற்கு முன்னாள் பிரபல கவர்ச்சி நாயகியாக இருந்தவர், ஷகிலா. இவர், ஆரம்பத்தில் ‘பி’ ரெட்டட் படங்களில் நடித்து வந்தார். மலையாளத்தில் மிகப்பெரிய கவர்ச்சி நாயகியாக விளங்கினார். அந்த படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் போதும், இடையிடையே பல படங்களில் துணை கதாப்பாத்திரங்களிலும் நடித்துள்ளார். பின்னர் 2012ஆம் ஆண்டிலிருந்து பி ரேட்டட் படங்களில் இனி நடிக்க போவதில்லை என்று தெரிவித்தார். 


மேலும் படிக்க | கொளுத்தி போட்ட நடிகை கஸ்தூரி-ஒரே ஒரு வீடியோ பதிவால் பற்றி எரியும் ட்விட்டர்..!


டிவி நிகழ்ச்சிகளில் ஷகிலா:


விவேக், வடிவேலு பாேன்ற நகைச்சுவை நடிகர்களின் படங்ளில் அவர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த ஷகிலாவிற்கு பட வாய்ப்புகள் குறைந்தது. இதையடுத்து, அவர் தொடர்ந்து பல திரையுலக டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆரம்பித்தார். 2014ஆம் ஆண்டில் கன்னட் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவருக்கு, மக்கள் நல்ல வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, சில யூடியூப் சேனல்களின் நிகழ்ச்சிகளை தாெகுத்து வழங்குவது அவ்வப்போது காமெடி டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என பல வகைகளில் மக்கள் மனங்களில் இடம் பிடித்தார். 


குக் வித் கோமாளியில் ஷகிலா..


தனியார் தொலைக்காட்சியின் பிரபலமான நிகழ்ச்சியாக விளங்கும் குக் வித் கோமாளியின் 2ஆவது சீசனில் பங்கேற்பாளராக களமிறங்கினார் ஷகிலா. இதில் மிகவும் நன்றாக சமைத்து நடுவர்களை இம்ப்ரஸ் செய்த இவர் கடைசி சுற்றிற்கும் சீக்கிரமாகவே தேர்வு செய்யப்பட்டார். இவரை இந்த நிகழ்ச்சியில் பலர் ‘மம்மி’ என அழைத்ததை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இவரை அப்படியே அழைத்தனர். இவர், சில நேர்காணல்களில் கலந்து கொள்வதும் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதுமாய் இருக்கிறார். 


பாலியல் கொடுமை..


நடிகை ஷகிலா தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை குறித்து ஒரு நேர்காணலில் பேசியுள்ளார். அப்போது, ஒருமுறை தன் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போன போது ஒரு மருத்துவரிடம் அவரை அழைத்து சென்றாராம். அப்போது டாக்டர் கொடுத்த மருந்து சீட்டில் எதுவும் புரியாததால் அதுகுறித்து அவரிடம் கேட்க போனாராம். அப்போது அந்த மருத்துவர், தொடக்கூடாத இடத்தில் தன்னை அவர் தொட்டதாக கூறியுள்ளார் ஷகிலா. மேலும், தனக்கு மிகவும் கோபம் வந்து அவர் கண்ணத்திலேயே ‘சப்’பென்று ஒரு அறை விட்டதாகவும் கூறியுள்ளார். 


அட்ஜஸ்ட்மண்ட் குறித்து ஷகிலா..


ஷகிலா தான் கலந்து கொண்ட நேர்காணலில் சினிமாவில் இருக்கும் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனை குறித்தும் பெண்களை தவறுதலாக நடத்துபவர்கள் சினிமா உலகிலும் இருப்பதாகவும் பேசியுள்ளார். 


மேலும் படிக்க | ‘நோலன் படத்தில் நடிப்பதற்காக பகவத் கீதையை படித்தேன்..’ ஹாலிவுட் நடிகரின் அசத்தலான பழக்கம்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ