இந்தியன் 2 படம் மீண்டும் தொடங்கப்பட்டு, விறுவிறுப்பாக சூட்டிங் நடைபெற்றது. இயக்குநர் சங்கர் மற்றும் நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் முழு வீச்சில் படப்பிடிப்பில் பங்கேற்று இரவுபகலாக படப்பிடிப்புகளை நடத்தினர். அப்போது திடீரென ஏற்பட்ட கிரேன் விபத்தில் 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இது திரைத்துறை வட்டாரத்தில் பெரும் சோக நிகழ்வாக அமைந்தது. இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் மற்றும் கமல்ஹாசன், இயக்குநர் சங்கர் ஆகியோருக்கு இடையே பிரச்சனையாக உருவெடுத்தது. இயக்குநர் சங்கர் - லைகா நிறுவனம் இடையே சட்டப்பிரச்சனையாக மாறி, நீதிமன்றத்தில் மாறி மாறி வழக்குகளை தொடர்ந்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனால் கைவிடும் நிலைக்கு சென்ற இந்தியன் 2 படம், நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் வெற்றியால் மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. உதயநிதிஸ்டாலின் முன்னெடுப்பால் மீண்டும் இந்தியன் 2 படம் உருவாகிறது. இயக்குநர் சங்கர் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்ட படக்குழுவினர் முழுமூச்சாக மீண்டும் இந்தியன் 2 பட வேலைகளில் இறங்கியுள்ளனர். படத்தின் தயாரிப்புக்காக நடிகர் கமல்ஹாசன் அமெரிக்காவில் பிரத்யேகமாக மேக்கப் டெஸ்டுகளை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஒப்பந்தமான சில நடிகர் மற்றும் நடிகைகள் மீண்டும் நடிக்க முடியாமல் போகும் சூழல் இருப்பதால், அவர்களுக்குப் பதிலாக புதிய நடிகர் மற்றும் நடிகைகளை தேர்வு செய்யும் பணியை தொடங்கியிருக்கிறார் இயக்குநர் சங்கர்.


மேலும் படிக்க | ஜெய்லரில் என்டிரியான நீலாம்பரி; மீண்டும் படையப்பா காம்போ


அந்தவகையில், சத்யராஜை மீண்டும் வில்லன் கதாப்பாத்திரத்தில் இறக்க முடிவெடுத்திருக்கிறார். வில்லனாக திரைத்துறையில் அறிமுகமாகி, ஹீரோ அவதாரம் எடுத்து தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் சத்யராஜை, கமலுக்கு வில்லனாக நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார் அவர். இதற்காக சங்கர், நடிகர் சத்யராஜிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறாராம். ஏற்கனவே சத்யராஜ், 1908களில் வில்லனாக நடித்தார். கமலுடன் காக்கிச் சட்டை படத்தில் வில்லனாக கலக்கியிருப்பார். அந்த காம்போ இந்தியன் 2 திரைப்படத்தில் இணைய வாய்ப்புகள் அதிகம் என்றே கூறப்படுகிறது. கட்டப்பா சத்யராஜ், கமலுடன் கரம் கோர்ப்பாரா? இல்லையா? என்பதை ரசிகர்களும் ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கின்றனர்.


மேலும் படிக்க | வைரலாகும் நடிகர் சூரி கோவிலில் ஆடிய ஒயிலாட்ட வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ